Friday, January 12, 2024

53

 

வீடு வந்ததும்
பேத்தியிடம் காண்பிக்கிறேன்
கொள்ளுத்தாத்தனின் நெஞ்சில்
ஒட்டிக்கொள்ளும்
கொள்ளுப்பேத்தியாய்
என் சட்டையில் ஒட்டிக் கொண்ட
அந்த வண்ணத்துப்பூச்சியை

”நோட்லதான வரைஞ்சேன்
தாத்தாட்ட ஏன் போன”

அதட்டலுக்கு பயந்து
மீண்டும் அது
பேத்தியின் நோட்டில் படமானது
“ஐ, குட் பாய்” என்று
கைதட்டி
குதித்து குதூகலிக்கிறாள் பேத்தி
கொள்ளுத்தாத்தனின் நெஞ்சில்
ஒட்டிக்கொள்ளும்
கொள்ளுப்பேரனாய்’ என்று
அருள்கூர்ந்து மாற்றித் தொடங்குங்கள்
இரண்டாவது பத்தியை

2 comments:

  1. உங்கள் கவிதையும் நெஞ்சில் ஒட்டிக் கொண்டது

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க சார்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...