அசடே அசடே
ஏனடா சத்தம்?
உனக்கும் எனக்கும்
ஒரே நாடுதான்
இல்லை என்று
எவனடா மறுத்தது?
இன்னொன்றும்
சொல்லவா
உனக்கும் எனக்கும்
உலகமும் ஒன்றுதான்
உனக்கொரு தேசம்
எனக்கொரு தேசம்
என்ற
உண்மைதான்
நீ
உணராதிருப்பது
இந்த உண்மையை
உணர்ந்தா யென்றால்
நீயும் நானும்
நிச்சயம்
ஒன்றுதான்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்