இன்றைய பொங்கல் பொழுதை மகிழ்ச்சிப் படுத்திப் போயிருக்கிறார்கள் மில்ட்டன் கிராமத்தான், சேகுவாரா, சுபஸ்ரீ மற்றும் அவர்களோடிருந்த மூன்று பிள்ளைகள்
அந்த குழந்தைகள் மூவரின் பெயர் மறந்துபோனதற்காக அந்த மூவரும் என்னை மன்னித்துவிட வேண்டும் என்று கோருவது வெறும் சொற்களல்ல
மில்டன்தான் அந்தப் பிள்ளைகளைப் பார்க்கப் போகிறான்
அம்மாடி
மில்டனும் Indra Kumar ரும் என் பிள்ளைகள்தான்
மில்டன் சார் என்பான், காதில் அப்பா என்று விழும்
இந்திரா அப்பா என்றே அழைப்பான்
கிஷோரையும் இவர்களையும் வேறாக ஒருபோதும் கருதியதில்லை
இந்திரா மகிழ்நனுக்கு கொடுத்த முதல் நேர்காணலைக் கேட்டதும் இரவு தூங்காமல் மகிழ்ந்திருந்தவன் நான்
பாரு இந்திரா திமுககாரய்ங்க உன்ன தூக்கிட்டு போகப்போறாங்க என்று சொன்னேன்
நடந்திருக்கிறது
இந்த அரட்டை கிஷோருக்கும் அவனது நண்பர்களுக்குமான அரட்டையாகவே மகிழவைத்தது
சுபாவை மில்டன் கேட்கிறான்
அரசியலில் யாரை ஆதரிக்கறம்மா?
இந்தியா கூட்டணியை
ஏன்?
எளிய மக்களுக்காக நிற்பதும் அவர்களுக்காகப் போராடுவதும்தான் அரசியல்
சரி, அதனால
கம்யூனிஸ்டுகளும் சிறுத்தைகளும் எளிய மக்கள் பக்கம் நின்று அவர்களுக்காகப் போராடுகிறார்கள்
சரி
அவங்க ரெண்டுபேரும் இந்தியா கூட்டணியில இருக்காங்க. அதனால அத நான் ஆதரிக்கிறேன்
அதையேதான் பிள்ளை சேகுவாராவும் சொல்கிறான்
எல்லோரும் அதைத்தான் சொல்கிறார்கள்
என்னவொரு அரசியல்
யூட்யூப் மீது நம்பிக்கை குறைந்து வருகிற காலத்தில் நம்பிக்கையை கையளித்துப் போயிருக்குதுகள் பொடிசுகள்
மகிழ்ந்திருங்க சாமிகளா
ஆறு பசங்களுக்கும் அன்பும் முத்தமும்
15.01.2026
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்