எங்கள் ஊருக்கு மேற்கே இருந்த கருணைகிரிப் பெருமாள் கோவிலை
கோவிலுக்கு மேற்கிலும் ஊர் விரிந்தபோது
ஊருக்கு கிழக்கே இருப்பதாய்
மேட்டு உசிலைத் தெருக்காரன்
ஊருக்கு கிழக்கே இருப்பதாய்
மேட்டு உசிலைத் தெருக்காரன்
ஒருவன் சொல்ல
பெருமாள் இருக்கும் திசை குறித்து பஞ்சாயத்தானது
ஒரு நல்ல மனுஷன்
சாமி மேற்கயும் இல்ல கிழக்கயும் இல்லையென்றும்
ஊருக்குள்ளதான் இருப்பதாகவும் சொன்னார்
ஆகா,
ஊருக்கு மேற்கே இருந்த சாமி ஊருக்குள்ள குடியேறியாச்சு
ஊருக்கு
ஒதுக்குப் புறமா இருக்கும்
நாங்கள் எப்போது
ஊருக்குள் குடியேறப் போறோம்?
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்