உரையாடிவிட்டு, உணவருந்திவிட்டு திரும்புவதற்குத் தயாராகிறேன். TVS தோல்கேட் சென்று பேருந்து ஏறிக்கொள்ளலாம் என்று ஏற்பாடு.
அவரது குழந்தைகளைப் பற்றி விசாரிக்கிறேன்
மூத்த குழந்தைக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் இரண்டாவது குழந்தை KAPV பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள் என்றும் கூறினார்
வாத்தியார் புத்தி பணி ஓய்வு பெற்றபின்பும் போகவில்லை.
பாப்பா எப்படி படிக்கிறா
சூப்பரா படிக்கிறா சார்
நல்லா படிக்க வையுங்க பாய்
வேண்டாம் சார். பத்தாம் வகுப்பு முடித்ததும் மார்க்கம் படிக்க வச்சு கட்டிக் கொடுத்துடனும் சார்
ஏங்க பாய் நல்லா படிக்கிற குழந்தைய போய்...
இடை மறிக்கிறார்,
ஏன் சார் மார்க்கத்தை நல்லா படிக்கிறவங்க படிக்கக்கூடாதா சார்
சிரிக்கிறார்
நானும் சிரிக்கிறேன்
இல்லீங்க பாய், இந்த காலத்துல பொம்பளப் பசங்க சம்பாரிச்சா சுயமிழக்காம இருக்கும்ல
ஆமா சார், வேலைக்கு உத்தரவு வாங்கப்போன பொண்ணோட ஹிஜாப்ப முதலமைச்சரே (நிதீஷ் குமார்) உருவறார். அந்தப் பொண்ணு வேலைக்கே போகல.
இவ்வளவுதான் சார் எங்களுக்கான பாதுகாப்பு
நானே சன்னமா உடைகிறேன்
”சமரசம் - 2026 ஜனவரி 1-15” தலையங்கம் இந்தக் கொடுமையை விரிவாக எடுத்து வைத்திருக்கிறது
பெண்கள் வேலைக்குப் போவதே அரிதாக இருக்கிறது
அதுவும் இஸ்லாமியப் பெண்கள் இன்னும் அரிதாகத்தான் பணிக்கு வருகிறார்கள்
15.12.2025 பீகாரில் 1,283 ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணியாணைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்
அந்த 1,283 மருத்துவர்களுள் நுஸ்ரத் பர்வீனும் ஒருவர்
அவரது ஹிஜாப்பைத்தான் நிதீஷ் பிடித்து இழுத்திருக்கிறார்
அந்தக் குழந்தை மனதளவில் சிதைந்திருக்கிறாள்
அதைவிடக் கொடுமை அதைக் கண்டு அருகில் இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டேயும், முதல்வரின் முதன்மைச் செயலர் தீபக் குமாரும் சிரித்திருக்கிறார்கள்
என்ன ஜென்மங்கள் இவர்கள்
உடைந்து செத்துப்போன பர்வீன் பணியில் சேரவில்லை
முகநூலிற்குப் போனால்,
தான் இப்போது ஹிஜாப் அணியும் இஸ்லாமியப் பெண். எனவே தான் மரணிக்கும் பொழுது தனது பழைய படங்களை போட்டு தனது மரண செய்தியை அறிவிக்க வேண்டாம் என்றும் ஹிஜாபோடு வெளியிடுமாறும் மக்களை நடிகை மும்தாஜ் கோருகிறார்
இருவருக்கும் மட்டுமல்ல
அனைத்து இஸ்லாமியத் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், குழந்தைகளுக்கும்
ஹிஜாப் போடுவதா வேண்டாமா என்று முடிவெடுக்கவேண்டியது நீங்கள்
அணிய விரும்புவர்களின் அணிதலுக்கான உரிமைக்காவும்
அணிய விரும்பாதவர்களின் மறுத்தலுக்கான உரிமைக்காகவும்
இடது சமூகம் எப்போதும் களமேகும்
04.01.2026
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்