இசை அமைப்பாளரும் பிரபலத் திரைப்படப் பாடகரும் திரைப்பட நடிகருமான மாணிக்க விநாயகம் அவர்கள் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது சமீபத்தில்தான் ”மனதோடு மனோ” நிகழ்ச்சியில் மாணிக்க விநாயகம் அவர்களது நேர்காணல் ஒன்றினைப் பார்க்க நேர்ந்தது பார்த்து பதினைந்து நாட்களுக்குள் இப்படி ஒரு செய்தி வரும் என்று நினைக்கவில்லை இசை மேதையான C.S.ஜெயராமன் அவர்களின் மருமகனும் சிஷ்யனுமான இவர் 1980 ஆம் ஆண்டில் வானொலி நிலையத்தின் A GRADE MUSIC COMPOSER ஆகிறார் 1984 இல் இருந்து கிராமியப் பாடல்கள், பக்திப் பாடல்கள, என்று ஏறத்தாழ 15,000 பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார் இசை அமைப்பாளர் பர்வீன் மணி அவர்களும் இவரும் இணைந்து “மேக்னோ சவுண்ட்” நிறுவனத்திற்காக ஒரு இசை ஆல்பம் வெளியிடுகிறார்கள் ஒரு நட்சத்திர ஓட்டலில் ”மேக்னோ சவுண்ட்” ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இவர் அந்த ஆல்பத்தில் இருந்து இரண்டு பாடல்களைப் பாடுகிறார் “வீட்டுக்குள்ள இருந்துகிட்டே கதவ சாத்தறா விதிய நெனச்சு அழுதுகிட்டே இருக்கச் சொல்லறா” என்ற பாடலால் ஈர்க்கப்பட்ட வித்யாசாகர் ”தில்” என்ற படத்தில் வாய்ப்பு தருகிறார் “சின்ன வீடா வரட்டுமா” என்ற பாடல் உலகத் தமிழ் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறது எப்படி இவ்வளவு நேர்த்தியாக உங்களை செதுக்கிக் கொண்டீர்கள் ? என்ற கேள்விக்கு நிறைய நல்ல பாடல்களைக் காதுகொடுத்துக் கேட்டேன் என்கிறார் எவ்வளவுப் பெரிய ஞானம் இது ஒருமுறை இலங்கையில் இசைநிகழ்ச்சியில் பாடுகிறார் “விடைகொடு எங்கள் நாடே” என்ற பாடலைக் கேட்ட ஒரு தாயார் இவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, எங்களது வலிய உணர்ந்து பாடுறப்பா இந்தக் குரலை வைத்துக்கொண்டு இத்தனை வருஷமா எங்கப்பா இருந்த? என்று கேட்டதை நெகிழ்ந்தபடியே மாணிக்கம் கூறுகிறார் நாம் கேட்பது இதுதான் இந்தக் குரலை வைத்துக்கொண்டு இவ்வளவு சீக்கிரமா ஏம்ப்பா போன? #சாமங்கவிய சரியாக ஒருமணி நேரம் 26.12.2021
Tuesday, December 28, 2021
இந்தக் குரலை வைத்துக்கொண்டு இவ்வளவு சீக்கிரமா எங்கய்யா போனீங்க மாணிக்கம்

Subscribe to:
Post Comments (Atom)
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
நேற்று “ஆற்றுப்படை” மின்னிதழில் அய்யா சதீஷ் எழுதியிருந்த “நவாப் அமைத்த லிங்கம்” கட்டுரை குறித்து எழுதியிருந்தேன் முருகனின் ஐந்தாம் படை வீட...
-
அத்வானி இல்லாமலா ராமர் கோவில் சாத்தியமானது அவரையே ஆலயத் திறப்பு விழாவிற்கு வரவேண்டாம் என்பதா இது எந்த ஊரு நியாயம் என்கிறீர்கள் அத்வானிக்கே...
ஓ மை! இந்தச் செய்தியே உங்கள் பதிவின் மூலம்தான் அறிகிறேன். அதிர்ச்சி! அருமையான கணீர் குரல். மனம் நம்ப மறுக்கிறது. புகழ்பெற்ற நடனகுரு வழுவூர் ராமையாபிள்ளையின் மகன். ஆம் சிஎஸ்ஜெ யின் மருமகன் சிஷ்யனும்.
ReplyDeleteநீங்கள் கேட்டிருக்கும் கடைசி வரியைக் கேட்பதில் ப்ளஸ் 1 - நானும்..
கீதா
மிக்க நன்றி தோழர்
Delete