Monday, July 20, 2020

இந்தியாவை விற்பதற்கான ஆதரவாளர் என்று

தொலைக் காட்சி வழி உரையாடலை மத்திய அரசு தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கிறது
அதில் ஒரு பகுதி வெற்றியும் பெற்றிருக்கிறது
அதற்காக இதற்கு முன்புவரை ஏதோ நியாயமான உரையாடலை ஊடகங்கள் வழங்கி வந்ததாகக் கொள்ளத் தேவை இல்லை
ஒருநாள் வலதுசாரி ஆதரவாளார் என்று ஒருவர் வருவார்
அவரே மறுநாள் சங்கரமட ஆதரவாளர் என்று வருவார்
அவரே மறுநாள் அல்லது அதே நாளில் இன்னொரு நேரத்தில் இன்னொரு தொலைக் காட்சியில் பாஜக காரராக விவாதத்தில் கலந்து கொள்வார்
இன்னும் இந்தியாவை விற்பதற்கான ஆதரவாளர் என்று ஒருவரும் வந்ததில்லை என்று நினைக்கிறேன்
ஒருக்கால் அதுவும் நிகழ்ந்து இருக்கக்கூடும்
ஐந்து பேர் விவாதத்திற்கு என்று கொண்டால்
நிச்சயம் மூன்றுபேர் சமயங்களில் நான்குபேர் அவர்களாகவே இருப்பார்கள்
அவர்கள் பேசுவதைவிட கத்துவதே பெரும்பான்மை நேரங்களில் நிகழும்
Aazhi Senthil Nathan சொன்னதுமாதிரி நமது கருத்தாளர்கள் பெரும்பாலும்
”தற்காப்பு ஆட்டத்தைத்தான்” ஆட வாய்த்தது
ஆனால் அதை நம் நண்பர்கள் மிகச் சரியாக செய்தனர்
வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவர்களை அம்பலப்படுத்தவும் செய்தனர்
இதையே அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை
அதற்கு நியாயமான காரணம் உண்டு
அவர்களது பிரதிநிதிகள் நிறைய பேசினாலும்
நமது மக்கள் குறைவாகவே பேசினாலும்
அதிலும் குறுக்கீடுகள் இருந்தாலும்
நமது நண்பர்கள் மக்களிடம் போய் சேர்ந்தார்கள்
அவர்கள் அம்பலப்பட்டு நின்றார்கள்
பாஜகவின் மிகப்பெரிய கனவு
“தமிழ்நாடு”
இந்த அளவிலான விவாதங்கள்கூட தங்களுக்கு ஆபத்தானவை என்று மிகச் சரியாக உணர்ந்தார்கள்
அவர்களுக்கான குரலைத் தவிர மற்றவற்றை மௌனப்படுத்திவிட முடிவெடுக்கிறார்கள்
விவாதிக்கும் நண்பர்களுக்கும் தொல்லை தந்திருக்கலாம்
அடுத்து அதையும் அவர்கள் தரக்கூடும்
வழக்குகள் பாயலாம்
சிரமப்படுத்தலாம்
அதற்கு முன்னதாக மக்கள் நலனில் ஆதரவு நிலையோடு இருந்த நெறியாளர்களை நெருங்கி இருக்கிறார்கள்
தோழர் அருணன் பேசும்போது,
ஆழியின் மொழியுரிமை விவாதத்தின்போது
புன்னகைத்த நெறியாளர்களையும் அவர்கள் கணக்கெடுத்திருக்கக் கூடும்
அதற்கான சாணக்கிய ஆளுமைகள் தமிழகத்தில் இல்லையா என்ன?
பட்டியல் ரெடி
அவர்கள் நம்புவது இதைத்தான்
ஏற்கனவே உள்ள மூவரோடு நெறியாளரும் சேர்ந்து நண்பர்களை அழுத்த வேண்டும்
நாம் போகாத நிலை வந்தாலும் அவர்களுக்கு மகிழ்ச்சியே
ஆனால் அவர்கள் நினைப்பது நடக்காது
காரணம் இப்போதைக்கு விவாதங்களை மக்கள் பார்ப்பதே நம் நண்பர்களின் செய்தியை, விவாதத்தைக் கேட்பதற்காகத்தான்
இவர்களும் இல்லை எனில்
மக்களுக்கு அது போரடிக்கும்
சரி முடிப்போம்,
ஊடக உரையாடலுக்கான வாய்ப்பு நமக்கு குறைந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்
நியாயமான ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை எப்படி எதிர்கொள்வது என்று தீர்மானிக்க வேண்டும்
”யூட்யூப்” உள்ளிட்ட ஊடகங்களைக் கையெடுக்க வேண்டும்
சிறு சிறு துண்டுப் பிரசுரங்கள்
தெருமுனைக் கூட்டங்கள் என்று
மக்களோடு உரையாட ஏராளமான வழிகள் உள்ளன
நம்பிக்கையோடு நகர்வோம்

2 comments:

  1. ஊடக உரையாடலுக்கான வாய்ப்பு நமக்கு குறைந்திருக்கிறது என்பது முற்றிலும் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...