Friday, June 25, 2021

ஊசியின் காதில் ஒட்டகம்கூட நுழையலாம் ….

பேச்சு வழக்கில் உள்ள அனைத்து மொழிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். காப்பாற்றுவது போதாதென்று அவற்றை வளார்த்தெடுக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள்

இப்படிக் கருதுபவர்கள் குறுகிய மனம் கொண்டவர்கள். இப்படியானக் கருத்து தேச விரோதமானது

எல்லா கிளை மொழிகளையும்இந்துஸ்தானியோடு இணைத்துவிட வேண்டும்

இதை தற்கொலை என்று கருதக் கூடாது. இது தியாகம்

என்று 27.08.1925 நாளிட்டயங் இந்தியாவில் காந்தி எழுதியதாகமொழி எங்கள் உயிருக்கு நேர்என்ற தனது நூலில் வைத்திருக்கிறார்

இந்த ஆண்டில் எனக்கு அய்யம் இருக்கிறது. காரணம், அவர் திராவிடர்கள் இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றுயங் இந்தியாவில் எழுதியதாக தோழர் அரண் தனது நூலில் கூறுகிறார்

தோழர் ஆழி செந்தில்நாதன் தனது மேற்காணும் நூலில் “1917 கும் 1920 கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியை தேசிய விடுதலை இயக்கத்தின் மையத்திற்கு நகர்த்தினார்என்றும் குறிப்பிடுகிறார்

இந்த காலக் குழப்பத்தை நாம் நின்று விவாதிக்க வேண்டிய அவசியம் இப்போது எழவில்லை

ஏன் எனில்,

காந்தி இந்துஸ்தானியில் இருந்து இந்திக்கு தாவி விட்டார் என்பது தெளிவாகிறது. அவர் எப்போது இந்திக்குத் தாவினார் என்பது இப்போது நமக்கு அவசியமில்லாத ஒன்று

அவர் இந்துஸ்தானியை ஏன் கை எடுத்தார்? கை எடுத்த இந்துஸ்தானியை கீழே வைத்துவிட்டு இந்தியை ஏன் கை எடுத்தார்? என்பதே நாம் இப்போது உரையாட வேண்டிய ஒன்றாக இருக்கிறது

காந்திஇந்துஸ்தானியை இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கான கருவியாகப் பார்த்திருக்கிறார்.. ஆகவே இந்துஸ்தானியை இந்திய மொழியாக அறிவித்துவிட வேண்டும் என்று ஆசைப் பட்டார்.

அப்படி அறிவித்து விட்டால் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான வேற்றுமைகளும் சண்டை சச்சரவுகளும் குறைந்து விடும் என்றும் அவர் கருதினார் என்பதாக தோழர் அரண் தனதுஇந்திய அரசிலமைப்புச் சட்டத்தில் இந்தி பேரினவாதம்என்ற நூலில் குறிப்பிடுகிறார்

இதை காங்கிரசில் இருந்த இந்துமதத் தீவிரவாதிகள் மிகக் கடுமையாக எதிர்க்கிறார்கள் 

அவர்கள் இந்தியை இந்துக்களின் மொழியாகவும் இந்துஸ்தானியை இஸ்லாமியர்களின் மொழியாகவும் கட்டமைத்துவிட வேண்டும் என்று செயல்பட்டார்கள்

அவர்கள் சமஸ்கிருதத்தைத்தான் இந்துக்களின் மொழியாகக் கட்டமைத்து அதை இந்தியாவின் மொழியாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று துடித்தார்கள்

அதில் அவர்களுக்கு சிக்கல்கள் இருந்தன

சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை

இந்துஸ்தானியிலோ பாரசீகச் சொற்களும் அரபிச் சொற்களும் கலந்த மொழியாக இருந்த்தது. இது அவர்களை உறுத்தியது. எனவே இந்துஸ்தானியில் உள்ள அந்த மொழிச் சொற்களுக்கு பதிலாக சமஸ்கிருத சொற்களை இணைத்து இந்தியை உருவாக்க முயன்றனர்

மொழி இரு மதத்தவரை ஒன்றிணைக்கும் என்று காந்தி கருதினார். மொழியைக் கொண்டு இரு மதத்தவரிடையே உள்ள பிரச்சினைகளை கெட்டிப்படுத்திவிட முடியும் என்று அன்றைக்கு காங்கிரசில் இருந்த இந்துமதத் தீவிரவாதிகள் கருதினர்

இதை நாம் இப்படி கொள்ளலாம்,

சில கிளை மொழிகளை அழித்து ஒரு ஒற்றைப் பொதுமொழியை உருவாக்குவதன் மூலம் மதமாச்சிரியங்களை கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும் என்று காந்தி கருதினார்.

ஒரு ஒற்றை மொழியைத் திணிக்க முயற்சித்தபோது ஒரே மதத்தவரைக் கொண்ட ஒரு நாடு இரண்டாக உடைந்ததை வரலாறு நமக்கு எச்சரித்துக்கொண்டே இருக்கிறது 

அது மட்டும் அல்ல,

அந்த முயற்சிதான் உலகத்தாய்மொழி நாளினையும் உலகிற்கு கொடை அளித்தது.

பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில் வாழ்ந்த மக்களின் தாய்மொழி உருதாகவும் கிழக்குப் பகுதியில் வாழும் மக்களின் தாய்மொழி வங்கமாகவும் இருந்தது.

மேற்குப் பாகிஸ்தான் கொஞ்சம் அரசியல் செல்வாக்கோடு இருந்த காரணத்தால் வங்கமொழி பேசும் கிழக்குப் பாகிஸ்தானியரை மக்களை சிறுபான்மையினராக பாவிக்க ஆரம்பித்தது.

இதன் ஒரு கூறாக கிழக்குப் பாகிஸ்தானியர்மீது தங்களது தாய்மொழியான உருதினை திணிக்க ஆரம்பித்தது

கிழக்குப் பாகிஸ்தானியர்கள், அதிலும் குறிப்பாக கிழக்குப் பாகிஸ்தான் மாணவர்கள் இதற்கு எதிராக மிக மூர்க்கமாக போராடினார்கள். அப்படி போராடிய மாணவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முயற்சித்தது பாகிஸ்தான் அரசு.

அதன் விளைவாக 21.02.1952 அன்று டாக்காவில் போராடிக்கொண்டிருந்த மாணவர்கள்மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்தியது அரசு. இதில் பல மாணவர்கள் கொல்லப்பட்டனர்

இதுவங்கதேசம்உருவாவதற்கான மிக முக்கியமான காரணமானது. வங்கம் உருவானபிறகு அவர்கள் ஒவ்வொரு பிப்ரவரி 21 அன்றும் மொழித் தியாகிகள் தினமாகக் கொண்டாடுவது என்று முடிவெடுத்து கொண்டாட்த் தொடங்கினார்கள்

பிரவரி 21 ஐநாவும் யுனெஸ்கோவும் உலகத் தாய்மொழி தினமாக அங்கீகரித்தன. அதன்பிறகுதான் நாம் பிரவரி 21 உலகத் தாய்மொழிகள் தினமாகக் கொண்டாடுகிறோம்

ஒரு மொழியைத் திணித்தால் ஒரு மதத்தவரே வசிக்கும் நாடும் இரண்டாகப் பிளவுபடும் என்கிற இந்தப் படிப்பினையை காந்தியார் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இது நிகழ்வதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே அவர் மறைந்து விட்டார்

ஆனால் இந்த வரலாற்று உண்மையை சரியாகப் படித்துக் கொள்ளாதவர்களாகவே பாஜகவினரும் ஆர்எஸ்எஸ் காரர்களும் ஒற்றைபடுத்தலில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறனர்

ஏதோ ஒரு வகையில் இந்தியை ஒற்றை மொழியாகக் கொண்டுவந்துவிட ஆசைப்படுகின்றனர்.

இந்தி என்பதுகூட அவர்களது இடைக்கால ஏற்பாடுதான்

சமஸ்கிருதத்திற்கு உயிரூட்ட ஆயிரமாயிரம் கோடிகளை அள்ளி இறைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

சமஸ்கிருதம் வளார்ந்ததும் அல்லது இன்றைய அளவிலேயேகூட அதனை ஒற்றை மொழியாக்க வெறிகொண்டே அலைகிறார்கள் 

இதற்காக இவர்கள் கையெடுக்கும் யுக்திகள்தான் மிகமிக ஆபத்தானவைகளாக இருக்கின்றன

இவர்கள் இந்தியை ஒற்றைமொழியாகக் கொண்டு வருவதற்கு செழித்தோங்கி இருக்கிற இந்திய மொழிகளைப் படுகொலை செய்வதற்கு முயற்சி செய்கிறார்கள்

இப்படிச் செய்வதன் மூலம் அந்த மொழிகளின், அவற்றைப் பேசும் தேசிய இனங்களின் அடையாளங்களை, விழுமியங்களை அழித்தொழிக்க அல்லது நீர்த்துப்போகச் செய்ய நினைக்கின்றனர்

இப்படிச் செய்வதன் மூலம் இந்திபேசும் மக்களுக்கு அடிமைகளாக, இரண்டாந்தரக் குடிமக்களாக மாற்றுவது என்பது அவர்களது திட்டம்

சுறுக்கமாகச் சொன்னால் மொழியை ஆரியப்படுத்துவதன் மூலம் மண்ணை ஆரியப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார்கள்

மொழியை சனாதனப் படுத்துவதன் மூலம் மன்னை சனாதனப்படுத்த முயற்சி செய்கிறார்கள்

மன்னை சனாதனப்படுத்துவதற்கு மொழியை சனாதனப்படுத்த வேண்டும். அதற்கு இடைஞ்சலாக இருக்கக்கூடிய மொழிகளை அழித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்

அவர்களது இந்த முயற்சிக்கு பெரும் சவாலாக இருப்பது தமிழும் தமிழ்நாடும். காரணம் அவர்களது இந்த சூழ்ச்சியை சரியாகப் புரிந்துகொண்ட நாடு தமிழ்நாடு. புரிந்து கொண்ட்து மட்டுமல்ல, அதற்கு மிக மூர்க்கமாக எதிர்வினையைத் தந்துகொண்டிருக்கிற பூமியாகவும் தமிழ்பூமி இருக்கிறது

அதனால்தான் இப்போது நடக்கும் சட்டசபைக்கான பொதுத் தேர்தலை சனாதனத்திற்கு எதிராக நடக்கும் போர் என்று பிரகடனப்படுத்தியது

அவர்களும் நமக்கு எதிராக இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள்

இப்போது இருக்கும் சில அரசிலமைப்புச் சட்டங்களை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கிறார்கள்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 120(1) பிரிவு பாராளுமன்றத்தின் செயல்பாடுகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும் என்கிறது. ஆங்கிலமும் இந்தியும் தெரியாத உறுப்பினர்கள் அவைத் தலைவரின் அனுமதி பெற்று தங்களாது தாய்மொழியில் பேசலாம் என்று கூறுகிறது

குறித்துக் கொள்ளுங்கள், அவைத் தலவர் அனுமதி தந்தால்தான் உறுப்பினர் தனது தாய்மொழியில் பேச முடியும்

ஆனால் மாநிலங்களைப் பொறுத்தவரை

“In the official language or in the language of the state or in hindi or in English” என்று தெளிவாக இருக்கிறது

மாநிலங்களைப் பொறுத்தவரை அந்த மாநில மொழியைத் தவிர இந்தியில் பேச அவைத் தலைவரின் அனுமதி தேவை இல்லை.

அதனால்தான் பாஜகவைச் சேர்ந்த ஒரு உறுப்பினர்கூட சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்று விரும்பினோம்

அப்படி யாரேனும் தேர்ந்தெடுக்கப்பட்டால்  அவர்கள் இந்தியைத் தமிழில் எழுதி வைத்து சபையில் படிக்க ஆரம்பித்து விடுவார்கள்

மொழியைப் பல வகைகளில் கொலை செய்யலாம். அவற்றில் மூன்றை இங்கு இப்படியாக வகைப் படுத்தலாம்

 1)   இணை மொழியாக இன்னொரு மொழியை புழக்கத்தில் விட்டு சிறிது சிறிதாக சொந்த மொழியை அப்புறப்படுத்த வைத்தல்

2)   அந்தக் குறிப்பிட்ட மொழி பேசும் வாழிடத்தில் இன்னொரு பெரும்பான்மை மொழி பேசும் மக்களை பேரதிகமாக குடியமர்த்துதல்

3)   ஒரு மொழி பேசும் பிராந்தியத்தை இரண்டாய் மூன்றாய் துண்டாடுதல்

ஒரு இனம் பெரும்பான்மையோடும் தனித்தன்மையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வேறொரு ஆதிக்க இனத்தவரை குடியேற வைப்பது என்பது  மிக முக்கியமான ஒன்று

இப்படிச் செய்வதன் மூலம் ஒரு காலகட்டத்தில் குடியேறிய இனம் பூர்விக இனத்தைவிட அதிகமாக மாறும்படிப் பார்த்துக் கொண்டாலே போதும் அது பூர்விகக் குடியின்  அதிகார அழிவிற்கான முதல்படியாக அமையும்.

இப்படியாக குடியேறியவர்கள் பெரும்பான்மையினராக மாறுகிறபோது அரசியல் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது கைகளுக்கு சென்றுவிடும்.

இதன் அடுத்த நகர்வாக, பெரும்பான்மை மொழி அலுவல் மொழியாக ஆட்சி மொழியாக மாறிவிடும்

பெரும்பான்மை மக்களது கலாச்சாரம், பண்பாடு, வழிபாடு, ஆகியவற்றை அந்தப் பகுதி மக்கள் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இறுதியாக அந்த இனமக்கள் தங்களது அடையாளத்தை இழந்து இரண்டாந்தர, அடிமைக் குடிமக்களாக மாற நேரிடும். மாற மறுக்கும்  மானமுள்ள மக்களை சிறையெடுப்பதும் அழித்தொழிப்பதும் நிகழும்

மானமுள்ள அந்த மண்ணின் இளைஞர்கள் அமைப்பாகத் திரண்டு தங்களது அடையாள பண்பாட்டு மீட்சிக்காக போராடவும் நேரிடும். வேறு வழியே இல்லாமல் ஆயுதம் ஏந்தவும் தேவை ஏற்படும்

ஆகச் சமீபத்தைய ஈழத்திற்கான போரட்டம் இதற்கான எடுத்துக் காட்டு

தமிழ் நாட்டிலும் இந்த நகர்வினை அவர்கள் ஆரம்பித்து விட்டார்கள்

NLC, தபால்துறை, ரயில்வே போன்ற பொதுத் துறைகளில் கொத்து கொத்தாக இந்தி பேசும் வடநாட்டவர்களை புகுத்துகிறார்கள். கூலி வேலையிலும் லட்சக்கணக்கான இந்திக்காரர்கள் வந்திருக்கிறார்கள்

தமிழ்நாட்டில் வடநாட்டுக்காரர்களுக்கு வீடு கட்டித் தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் பாஜக கூறுகிறது

தமிழ்நாட்டில் முதல்முறையாக தமிழ் மக்களிடம் இந்தியில் வாக்கு கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்

ஒரு மொழியைப் புழங்கி வரும் ஒரு இனம் அல்லது குழு அல்லது இதுபோன்ற எதுவோ ஒன்று கட்டாயத்தின் பேரிலோ அல்லது தாமாகவோ இன்னொரு மொழியையையும் சேர்த்து புழங்க வேண்டிய நிலை வருகிறது என்று கொள்வோம். அந்தச் சூழலில் ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு அந்த இனம் இன்னொரு மொழியின் மீது சாயத் தொடங்குகிறது என்றும் கொள்வோம். ஒருக்கட்டத்தில் தனது சொந்த மொழியைப் புழங்காது அடுத்த மொழியைப் புழங்க ஆரம்பிக்க ஆரம்பிக்கிற புள்ளியில் அந்த இனத்தின் தாய்மொழி மரணமடையும்

தமிழகத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று திரு ராமதாஸ் அவர்கள் கூறுவதை நம்மில் பலபேர் பகடீயோடு கடக்கிறோம். இது மிக மிக ஆபத்தானது.

இது பாஜகவின் செயல்திட்டம்

பலமாக இருக்கும் தமிழ்நாட்டில் என்ன முயன்றும் உள்ளே நுழையமுடியாத சனாதனத்தை மன்னை இரண்டாய் மூன்றாய் துண்டாடி பலவீனப்படுத்துவதன் மூலம் உள்ளே நுழைக்க முடியுமா என்பது அவர்களது திட்டம்

ஊசியின் காதில் ஒட்டகம்கூட நுழையலாம் தமிழ் மண்ணில் சனாதனம் நுழைய முடியாது

ஆனாலும் கவனமாக இருப்போம்

நன்றி  : உயிர் எழுத்து

        மே 2021 

 


 


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...