ஒரு பள்ளியில் சில ஆசிரியர்கள் அந்தப் பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்
100 பக்க வாக்குமூலம் என்கிறார்கள்
சினிமாவிற்கு அழைத்துப் போனேன் என்கிறார்
கருக்கலைப்பு நடத்தினேன் என்கிறார்
சக ஆசிரியர்களுக்கு அனுப்பி வைத்தேன் என்கிறார்
வயிறு பத்திக் கொண்டு எரிகிறது
இத்தகைய சூழலில் எதிர்க்கட்சிகள்தான் நெருப்பாய் சுழலும்
எதிர்க்கட்சித் தலைவரை இதுகுறித்து கேட்கிறார்கள்
எதிர்க்கட்சித் தலைவர் ஏதும் பேசாமல் கடக்கிறார்
முன்னாள் அமைச்சர் வளார்மதியோ இதெல்லாம் ஒரு கேள்வியா என்கிறார்
அவரது மௌனமும் இவரது எதிர்வினையும் அந்தக் குற்றத்திற்கு சற்றும் சளைத்தது அல்ல
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்