Thursday, June 10, 2021

30.01.2021

                                                                30.01.2021


                                                                          01


சொன்னானாம்
மீண்டும் மீண்டும் ஒளிபரப்பான
நீண்ட இரங்கல் மிகையென்றும்
தனதென்று காட்டப்பட்ட உடலின் ஒப்பனையில்
கவனம் போதாதென்றும்



02


எனக்குத் தெரிய காந்தி இரண்டுமுறை பிறந்திருக்கிறார்
போர்பந்தரில் ஒருமுறை
எரவாடா சிறையில் தந்தை அம்பேத்கர் காந்தியோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தால் மறுமுறை
(தேவைப்படுமானால் இதை விரிவாக இன்றிரவு எழுத வேண்டும்)
ஆக,
தந்தை அம்பேத்கர் காப்பாற்றிய காந்தியை கோட்சே கொன்ற தினம் இன்று


03


ஆமாம்பா
ஆமாம்
மறுக்கவில்லை
எங்களில் எவரும்
டவுசர்கள் புடைத்து நிற்க
சத்தியம் செய்கிறோம்
கோட்சே தலையில்
எங்கள் வலது கைகளால் தொட்டு
கொன்றது அவன்தான் அவரை
அதற்கென்ன?
சொல்லுங்கள் நெஞ்சைத் தொட்டு
உரமாகவில்லையா
கதர் வளர
அவரது கொலை
கொல்லப்பட்டவர் பெயர்
அவர்களை வளர்க்கலாமெனில்
வளரக் கூடாதா நாங்கள்
கொன்றவன் பெயரால்?
உணர்ந்திருக்கிறீர்களா
யாரேனும் உங்களில்
வில்லனும் கொலைகாரனுமான
ஒருவனை முன்னிருத்தி
நாங்கள் படும் சிரமம்
நகர்வதற்கு
தோண்டும் கரியில் திருடினாலும்
வாங்கும் பீரங்கியில் சுரண்டினாலும்
பிறை நம்பிகளை பேக்கரி அடுப்பில்
எரித்தாலும்
பத்து லட்சத்துக்கு கோட்டெடுத்தாலும்
அதற்கும் மேல நூறு போட்டு
கோவணமெடுத்தாலும்
சட்டென மறந்துவிடும் மக்களென்பதால்
மூச்சு விடுகிறோம் ஏதோ
கதரும் காவியும்
போக
அவரது பெயரால்
அனைத்தையும் விற்க முயன்றார்கள்
அவர்களைத்தான் தொடர்கிறோம்
காப்பீடு ரயிலென்று
போக,
நாங்கள் இடிப்போம்
அவர்கள் பார்ப்பார்கள்
அவர்களென்ன நாங்களென்ன
ஒன்றுதான் இருவரும்
நகர்வீர்களா...
நாடென்பதென்ன
நீங்கள் இருவர் மட்டுமா?
இல்லைதான்...
நாடென்பது
நீங்களும் சேர்த்துதான்
தெரியுதுல்ல...
தெரிந்தென்ன...
தெருவில்
ரயிலடியில்
காவல் நிலையத்தில் போராடி
சிறையில்
சாவீர்கள்
அடிபடுவீர்கள் மக்களுக்காக
தேர்தல் வரைக்கும்...
???
மக்களடிப்பார்கள் உங்களை
தேர்தலன்று
நகருங்க பாஸ்
பேசாம
(எப்போது எழுதியதெனத் தெரியவில்லை)






No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...