01
இன்று தோழர் M S Rajagopal அவர்கள் வைத்துள்ள செறிவான பதிவு ஒன்றைத் தன் பக்கத்தில் வைத்திருக்கிறார்
அதன் பிழிவாக நான் கொள்வது
அறிவியலை தமிழ்ப் படுத்துவதும்
அறிவியல் சொற்களை தமிழ்ப் படுத்துவதும்
வேறு வேறு
இரண்டும் முக்கியமானவைதான்
அறிவியலை தமிழ்ப் படுத்துவது கட்டாயம்
இதில் சமரசம் கூடாது
ஆனால் அறிவியல் சொற்களை தமிழ்ப் படுத்தும்போது
நெளிவு சுழிவு அவசியம்
02
கொட்டும் பனியில்
வீரச் சமரில்
உயிரை நீத்த
உழுகுடித் தகப்பனே
என்னைக் காக்க
எம்
மண்ணைக் காக்க
களத்தில் நிற்கும்
உழுகுடித் தோழனே
டிராக்டர் ஓட்டும்
மகனே மகளே
தேசம் காக்க
நீங்கள் நடத்தும்
ட்ராக்டர் பேரணி
வெல்லும் வெல்லும்
நிச்சயம் வெல்லும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்