இன்று காலை பள்ளிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். பேருந்து கொணலை என்ற இடத்தில் நின்றபோது மிகச் சரியாக பத்து இளைஞர்கள் ஏறினர். தமிழும் ஹிந்தியும் கலந்துதான் பேச முடிந்தது அவர்களால். சமயபுரத்திற்கு பயணச்சீட்டு வாங்கினர். சமயபுரத்திற்கு மூன்று கிலோமீட்டர் இருக்கும் போது ஒரு இடத்தில்அம் மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டும். நிறுத்தச் சொல்லி இந்தியிலும் தமிழிலுமாக நடத்துநரிடம் கெஞ்சினர்.
அந்த இடத்தில் எழும்பும் கட்டிடத்தில் வேலை பார்ப்பதாகச் சொன்னார்கள். நடத்துநர் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார்.
சமயபுரம் இறங்கி இங்கு வருவதெனில் நிச்சயம் மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டும்.
“எவ்வளவு சம்பளம்?” ஓட்டுநர் கேட்டார்.
“ரெண்டு நூறு”
ஓட்டுநர் அவர்கள் கேட்ட இடத்தில் பேருந்தை நிறுத்தினார். மகிழ்வோடு இறங்கினார்கள். நடத்துனரின் முகம் இறுகியது.
“ நான் முடியாதுங்கறேன். நீ நிறுத்தினா என்னடா அர்த்தம்?”
பதிலேதும் சொல்லாமல் ஓட்டுநர் சிரித்தார்.
“என்ன நக்கலா”
“இல்லடா மாப்ள. பீகார்ல இருந்து வந்திருக்காய்ங்க. இருனூறு ரூபாய்க்கு சக்கையா நம்மாலுங்க சுரண்டுறாங்க. ஏதோ நம்மால முடிஞ்சது ரெண்டு கிலோமீட்டர் நடைய குறச்சிருக்கோம். கோவப் படாதடா. குடிகாரங்க அலும்புக்கெல்லாம் ப்ரேக் போடுறதில்லையா?. பாவம் உழைக்கிறப் பசங்க உடுடா”
நடத்துநர் எதுவும் பேசவில்லை.
எனக்கு பேசியே ஆக வேண்டும் என்றாகிவிட்டது. கொட்டிவிட்டேன்.
உழைப்பின் அருமையினை உணர்ந்த ஓட்டுநர் பாராட்டிற்கு உரியவர்
ReplyDeleteவெளி மாநில உழைப்பாளிகளின் உதிரம் உறிஞ்சப் படுவது வேதனைதான் தோழர்
தம 2
மிக்க நன்றிங்க தோழர்
Delete