திடீரென்று போன மாதத்தில் ஒருநாள் அரசமுருகபாண்டியன் அழைத்து டிசம்பர் 26 அன்று போதி கூட்டம் வந்து பேசிவிட்டு போ என்றான்.
வழக்கம் போலவே கம்யூனிஸ்டுகளைத் தாக்கும் வேலையை அங்கும் சில தோழர்கள் செய்தார்கள். கம்யூனிஸ்டுகள் மீதான அவர்களது தாக்குதல் என்பது அவர்களது எதிர்பார்ப்பை கம்யூனிஸ்டுகள் செய்ய வில்லை என்பதாகவும் ஜாதிப் பிரச்சினையில் அவர்கள் அதிகமாக அக்கறை காட்டவில்லை என்பதாகவும் இருந்தது. தோழர் சிம்சன் பேசும் போது இன்னேரம் சேரிகள் எல்லாம் கம்யூனிஸ்டுகளால் நிறம்பி வழிந்திருக்க வேண்டாமா? என்றார்.
ஆக, கம்யூனிஸ்டுகள் தங்களோடு இன்னமும் அணுக்கமாக வர வேண்டும், தங்களோடு நிற்க வேண்டும் என்பதே அவர்களது ஆசை.
பொறுமையாகப் பேசினேன். பாப்பாபட்டி, கீறிப் பட்டி போன்ற இடங்களில் இடதுசாரிகளின், குறிப்பாக சிபிஎம் மின் போராட்டம் குறித்தும் பேரளியில் அவர்களது போராட்டம் பற்றியும் பேசினேன். அவர்கள் கைதாங்கும் கருவிவியைதானே அவர்கள் சுமக்க இயலும் என்று நான் சொன்னதை ஏற்றார்கள்.
இடதுசாரிகள் செய்வதை பொது மக்களிடம், குறிப்பாக தலித்துகளிடம் கொண்டு சேர்க்கிற தேவை அவர்களுக்கு இருக்கிறது.
கருப்பும் சிவப்பும் நீலமும் கைகோர்க்க வேண்டிய அவசியத்தை பேசப் பேச மிகுந்த கவனத்தோடு காது கொடுத்துக் கேட்டார்கள்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்