அவர் ஒரு மிகப்பெரிய அதிகாரி. என்னை அவர் அய்யா என்றும் அழைப்பார், சார் என்றும் அழைப்பார். நான் அப்பா என்று உள்வாங்கிக் கொள்வேன்.
நேற்றென்னை அழைத்து கடலூருக்கு என்ன செய்யலாம் என்றார். ஆச்சரியமாக இருந்தது.
பட்டியலை சொன்னேன். இரண்டு மணி நேரத்தில் மீண்டும் அழைத்து யாரிடம் சேர்க்கட்டும் என்கிறார்
கடலூர் களத்தில் இருக்கும் தம்பி பிரபு நம்பர் தருகிறேன். பிரபுவிற்கும் இவரது எண்ணைத் தருகிறேன். பேசிக் கொள்கிறார்கள்
இரவு இருவரும் அழைத்து பொருட்களை மக்களுக்கு சேர்த்த தகவலைத் தருகிறார்கள்
இன்று தார்பாய் சைபால் அரிசி மருந்து கேட்கிறேன் ஸ்டேடஸில்
இப்போது அழைத்து அரிசி சிப்பங்கள் தார்ப்பாய்கள் மருந்து நாப்கின் இருப்பதாக கூறுகிறார்
பிரபுவை அழைத்து சொல்கிறேன்.
நாளை அவை மக்களை சென்றடையும்.
நன்றி பிரபு
நன்றி மகளே
நன்றி மகளே
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்