Monday, August 3, 2026

குறுநூல் 03

 

யாரது
ஆடிப் பெருக்கன்று
நடுக்காவிரியில்
ஊற்று தோண்டுவது

Thursday, July 30, 2026

குறுநூல் 02

 

யாரும் பார்க்காத
காட்டின் சொச்சம்
பேரழகு

தெரிந்துகொள்ள எத்தனை இருக்கு

 

தோழர் நல்லகண்ணு அவர்களுக்கும் தோழர் சங்கரய்யாவிற்கும் இடையே உள்ள தோழமை எல்லோருக்கும் தெரியும்.
தோழர் நல்லகண்ணுவிற்கும் கலைஞருக்கும் இடையே உள்ள உறவும் அனைவருக்கும் தெரியும்.
தோழர் நல்லகண்ணுவிற்கும் தோழர் கே.முத்தையாவிற்கும் இடையே இருந்த தோழமை குறித்த மிக அரிதான ஒரு தகவலை மானா பாஸ்கரன் தனது ‘’தோழர் நல்லகண்ணு’’ என்ற நூலில் தருகிரார்.
தோழர் நல்லகண்ணுவும் தோழர் கே.முத்தையாவும் வகுப்புத் தோழர்கள். அல்லது குறைந்த பட்சம் பள்ளித் தோழர்கள்.
இதுவே எனக்கு புதிய செய்தி.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு நிதி உதவியோ அல்லது படைக்கு ஆட்களைத் திரட்டவோ கூடாது என்று காங்கிரஸ் மக்களைக் கேட்டுக் கொண்டிருந்தது.
இவர்கள் பள்ளியில் இரண்டாம் உலக யுத்தத்திற்கு ஆதரவாக நாடகம் நடத்தி காங்கிரஸ் செய்யக்கூடாது என்று சொல்லி இருந்த இரண்டையும் சேகரிப்பது என்று சிலர் முயற்சி செய்தனர்.
தோழர்கள் இருவரும் சேர்ந்து அந்த நாடகத்தை நடக்கவிடாமல் பார்த்துக் கொண்டனர்.
பள்ளி நிர்வாகம் தோழர் கே.முத்தையாவை பளியில் இருந்து வெளியேற்றிவிட்டது.
தோழர் கே.முத்தையா பின்னாளில் இலங்கைக்கு சென்றுவிட்டார்.
அங்கிருந்தபடி மாதாமாதம் பத்து ரூபாயும் , வீரகேசரி இதழையும் நல்லகண்ணுவிற்கு அனுப்பி வந்தார்.
வீரகேசரியை தனக்கு வைத்துக் கொண்டு பத்து ரூபாயை நண்பர்களுக்கு செலவிட்டுவிடுவாராம் தோழர் நல்லகண்ணு.
தெரிந்துகொள்ள எத்தனை இருக்கு

குறுநூல் 01

 

சட்டென வந்தெனது
தாகத்தைப்
பருகிப் போ

29.07.2026

இஸ்ரேலைக் குறிப்பிடாமல் ஈரானை எப்படி

 

எரிக் ஹாப்ஸ்பாம் குறித்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
எந்தவொரு நாட்டிற்கென்றும் தனிப்பட்ட வரலாறு என்று ஒன்று இருக்க முடியாது. அப்படி ஒன்றை எழுதிவிடலாம் என்று நினைப்பது அபத்தம்.
இங்கு நடக்கும் ஒன்றிற்கான காரணம் ஏதோவொரு தூர தேசத்தில் இருக்கக் கூடும் என்கிறார்.
அமாம், ஆமாம்.
இஸ்ரேலைக் குறிப்பிடாமல் ஈரானை எப்படி ஒருவரால் எழுதிவிட முடியும்?
அமெரிக்காவையோ அது வீசிய அணுகுண்டுகளையோ குறிப்பிடாமல் ஜப்பானின் வரலாறு சாத்தியமா என்ன?

30.07.2026

Tuesday, July 28, 2026

எதேதோ பிழைக்கும் தமிழ் மண்ணில்

 


அநேகமாக அமைச்சரான கையோடு ஆளுநரே வேந்தர் என்று பொருள்பட பேசிய தமிழ்நாட்டின் விரோதி நீங்கள்.

அவர் இதைத்தானே செய்வார்.

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவரே மனோன்மணியம்தான்.

எங்களுக்கு

நீங்களோ, விஜயோ, கவர்னரோ

எல்லோரும் ஒன்றென்றும் தெரியும்

இந்த புறக்கணிப்பு நடிப்பென்றும் தெரியும்.

எதேதோ பிழைக்கும் தமிழ் மண்ணில்

நீங்களும் பிழைத்துவிட்டுப் போங்கள்


28.07.2026

10 2026

 

நேற்றுன்
கனவில் வந்தபோது
நான் பேரழகாய்த் தெரிந்ததாய்
குறுஞ்செய்தியிலேன் அனுப்புகிறாய்
கனவில் வந்தேனும் சொல்லித் தொலை

வன்னியரசுவிற்கு இது தெரியும்.

 

அனிதாவின் உடல் அரியலூர் மருத்துவமனையில் இருக்கிறது.

CPM கட்சியின் தோழர்கள் ரமேஷ், செல்லத்துரை, மருத்துவர் கருணாகரன்,

விசிகவினர்

அனிதாவின் உறவினர்கள்

மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று உடலை வாங்க மறுத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

திருமா வருகிறார்.

உடலை நல்லடக்கம் செய்வோம் முதலில் என்கிறார்.

மறுத்தபடி கோஷமிடுகிறார்கள்.

மக்களை சமாதானம் செய்ய திருமா பட்ட பாடு சொல்லி மாளாது.

உடலை வாங்கக் கூடாது என்று கோஷமிட்டவர்களில் பேரசிரியர்கள் இருந்தார்கள், அரசு ஊழியர்கள் இருந்தார்கள், ஆசிரியர்கள் இருந்தார்கள், சிபிஎம் தோழர்கள் இருந்தார்கள்,

விசிக தோழர்களும் இருந்தார்கள்.

வன்னியரசுவிற்கு இது தெரியும்.

எச்சிதுப்பி எச்சி காய்வதற்குண்டான நேர மெனக்கெடல்தான்

 


ஜூலை 2026 ’’பொங்கும் பூம்புனல்’’ வந்திருக்கிறது. இது பதினொன்றாவது இதழ்.

முதலில் தொடர்ச்சியாக பதினோறு இதழ்களைக் கொண்டு வருவதற்கு ஒரு பிடிவாதம் வேண்டும். அது நிறையை இருக்கிறது நண்பர்களிடம்.

அதற்காகவே ஒரு விழா எடுத்து இவர்களைக் கொண்டாட வேண்டும்.

ஒவ்வொரு இதழும் நச்சென்று வந்துகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

வழக்கம்போலவே உள்ளட்டையின் கலைமணி அவர்களின் கவிதையோடு தொடங்குகிறது இதழ். கவிதையும் வைத்திருக்கிற விதமும் அழகு.

பூமணியின் ரீதி, தோப்பு, எதிர்கொண்டு ஆகிய சிறுகதைகள் குறித்த கலைமணியின் பதிவுகள்,

‘’அர்ச்சனா 31 நாட் அவுட்’’ என்ற மலையாளப் படம் குறித்த கலைமணியின் பதிவு

கணேஷ்ராமும் கலைமணியும் தொகுத்தளிக்கும் செய்தித் துளிகள் என்று இதழ் விரிகிறது.

ஆனால் இந்த இதழில் முத்தாய்ப்பாய் படுவது கணேஷ்ராம் எழுதியுள்ள, ’’உலகமயத்தின் மற்றுமொரு சமூக மாறுதல்’’ என்ற கட்டுரையும், ‘’அதனால் என்ன இப்போ?’’ என்ற புனைவு கலந்த அபுனைவும். இரண்டும் வேறு வேறு காரணங்களுக்காக முன் வந்து நிற்கின்றன.

E20 பெட்ரோல் குறித்த கட்டுரை அப்படிவொரு நச். நடையில் இருந்து இதையும் கணேஷ்ராம்தான் எழுதியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

எத்தனால் கலந்த பெட்ரோல்தான் மோடிக்கான அடுத்த தலைவலியாக எழுந்துள்ள சூழலில் இந்தக் கட்டுரை வைக்கும் தரவுகளும் தர்க்கங்களும் அப்படியொரு அழகு.

எத்தனால் குறித்த அரசின் விளக்கங்களை வைத்து அதைத் தகர்த்திருக்கிறது இந்தக் கட்டுரை.

எதையும் சொந்தமாக்காமல் அனைத்தையும் வாடகைக்கு நுகர்வதன் மூலம் நிறைய நுகரலாம் என்கிற தேன் தடவிய தாராளமயத்தின் நச்சுபிஸ்கட் ஏறத்தாழ எல்லோரையும் விழுங்கிக்கொண்டிருக்கிற ஆபத்தை உலகமயத்தின் மற்றுமொரு சமூக மாறுதல் புரிகிற மாதிரி பேசுகிறது. இங்கு புரிகிற மாதிரி என்பதை அழுத்தி அடிக்கோடு இட்டு வாசிக்கக் கேட்கிறேன்.

ஒரு கட்டத்தில் சந்தா முடிந்ததும் நம்மிடம் நாம் நுகர்ந்த ஏதும் இருக்காது. ரெஃபெரன்ஸ் இல்லாத சூழலில் கருத்துச் சண்டைக்கு வாய்ப்பே இருக்காது. அவன் சொல்வதுதான் எல்லாம். மறுக்கத் தரவற்றுப் போகும் அபாயத்தைக் குறித்து கவலைப்படும் கணேஷை சக ஊழியன், தோழன் என்பது தாண்டி பிடித்துக்கொள்ள வேண்டும்.

நான்
காதலென்னும்
கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே

அந்தக்
கருணைக்கு நான்
பரிசு தந்தேன்
தொட்டிலின் மேலே

என்ற பாடல் யாருக்குப் பிடிக்காது. என்னவொரு இசை. என்னவொரு ஃபீல். இப்படி விரசமில்லாம எவனால எழுத முடியும் என்பார் என் அப்பா.

கூர்ந்து பாருங்களேன், இதுதான் பெண்ணடிமைத்தனத்தின் உச்சம்.

நான் ஜெசி ராணியை அப்படிக் கொண்டாடுவதற்கு அவரிடம் இருக்கும் ஃப்ளோதான் காரணம்.

இதே ஃப்ளோல இதற்கு எதிராக ஜெசி எழுதும்போது, குறித்து வையுங்கள் அவர் பாபுலர் எழுத்தாளராகி விடுவார்.

எலான் மஸ்க் குறித்த, அதானி குறித்த எல்லாமும் அழகு.

போவோமா ஊர்வலம் எனக்குப் பிடித்தப் பகுதி. இன்னும் கொஞ்சம் மெனகெடுங்களேன் என்பது உரிமையோடான என் நேயர் விருப்பம். விஷயத்தில் பிரச்சினை இல்லை. டெலிவெரியில் சன்னமோ சன்னமாக மெனக்கெட்டால் பூம்புனலின் சிக்நேச்சர் இதுதான்.

ஒன்றைச் சொல்ல வேண்டும்.

கணேஷ்ராமிற்குள் ஆயிரம் கட்டுரைகள் ஊறிக்கிடக்கின்றன.

எச்சிதுப்பி எச்சி காய்வதற்குண்டான நேர மெனக்கெடல்தான், ப்ரொஃபஷனல் டச் முழுவீச்சில் மிளிரும்.

பூம்புனல் இல்லை எனில் நானே அவரிடம் கட்டுரை கேட்பேன். இருக்கு அவரிடம்.

படைப்புகள் வர ஆரம்பித்தால் வேற லெவல்தான்.

மெனக்கெடும் அனைவரையும் இறுகப் பற்றிக் கொள்கிறேன். 

அந்த ஏழைகளுக்கு நிலம் கிடைக்கும்வரை மகிழ்ச்சியோடு அடி வாங்குவோம்

 


இந்தப் படத்தை தம்பி Senthil Vel பக்கத்திலிருந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் படத்தோடு,

போராடும் தோழமைக் கட்சிகளுக்கே பாதுகாப்பில்லை. மக்களுக்கெங்கே பாதுகாப்பிருக்கப் போகிறது என்று சொல்லியிருந்தார்.

உண்மைதான். என்ன, போராடுவது யாரெனினும் எந்த ஆட்சியிலும் பாதுகாப்பில்லை என்பதுதான் கள எதார்த்தம்.

அவிநாசிக்கு அருகேயுள்ள ஈட்டி வீராம்பாளையத்திலுள்ள அறிவொளி நகரில் வீட்டு நிலமற்ற மக்களுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டது.

இது நடந்தது 1994 இல்.

ஆனால் அந்த நிலங்களை அளந்து பயனாளிகளுக்கு இதுவரை வழங்கவில்லை.

இது தொடங்கியபோது ஜெயலலிதா முதல்வர்

பிறகு 1996 முதல் கலைஞர் முதல்வர்

2011 முதல் மீண்டும் ஜெயலலிதா முதல்வர்

பிறகு பன்னீர் செல்வம் முதல்வர்

பிறகு பழனிசாமி முதல்வர்

அதன்பிறகு என் ஆயுளின் சிறந்த முதல்வர் என்று நான் கருதும் ஸ்டாலின் முதல்வர்

இப்போது விஜய்

எல்லோரது காலத்திலும் போராடியாயிற்று

எல்லோரிமும் அடிவாங்கியாயிற்று

இப்போதும் 15 நாட்களுக்குள் அளந்து தருவதாகக் கூறியிருக்கிறார்கள்.

இல்லையென்றால் 17.08.2026 அன்று மீண்டும் வருவோம்

அடிவாங்குவோம்

அந்த ஏழைகளுக்கு நிலம் கிடைக்கும்வரை மகிழ்ச்சியோடு அடி வாங்குவோம்

அவ்வளவுதான் செந்தில்


வன்னியரசு ப்ளீஸ்

 



இப்பவும் சொல்கிறேன்

உங்க உசரத்திற்கு இது அழகல்ல

அடச் சீ போ னு நகர வச்சுடாதீங்க

வன்னியரசு ப்ளீஸ்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...