Monday, May 13, 2024

பல வடிவங்களில் இருக்கும் ஒரே கடவுளின்

 ”ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க”

என்பது திருவாசகம்
பல வடிவங்களில் இருக்கும் ஒரே கடவுளின் தாழ் பணிகிறேன் என்கிறேன் மாணிக்கவாசகர்
மாமன்னரரின் மதவெறிப் பேச்சு இந்த ஏகன் அநேகன் தத்துவத்திற்கு எதிரானது

அம்பானி அதானியை மன்னர் ராகுலிடம் தள்ளியது என்பது

 எதிரிக்கு எதிரி நண்பன் என்பது இயல்பானது

எதிரியின் நண்பனை நண்பனாக்குவது என்பது தந்திரம்
அம்பானி அதானியை மன்னர் ராகுலிடம் தள்ளியது என்பது பாசிசத்தின் பின் நவீனத்துவ யுக்தி

இந்த அழைப்பை ராகுல் ஏற்றுக் கொண்டிருக்கிற நிலையில்

 இந்த அழைப்பை ராகுல் ஏற்றுக் கொண்டிருக்கிற நிலையில்

மன்னரும் ஏற்பார் என்றே நம்புகிறோம்







பதில் சொல்லாமல் கிளம்பிப் போய்விட்டார் மன்னர்

 மன்னர்னாலே இப்படிக் கோபப்படுறியே ஏன்டா மாப்ள?

ஒரு நேர்காணல்
அநேகமா, கரண் தாப்பரோடு என்று நினைக்கிறேன்
குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறித்து சன்னமான கேள்வி
சன்னமான கேள்விதான்
அந்த சம்பவம் குறித்து வருத்தமேனும் படுகிறீர்களா?
இந்தச் சன்னமான கேள்விக்கே
கோபத்தோடு தண்ணீர் குடித்துவிட்டு
பதில் சொல்லாமல் கிளம்பிப் போய்விட்டார் மன்னர்
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு வருத்தம்கூட கொள்வதற்கு தயங்குகிற மனிதனை நினைத்தால் கோபம்தானே வரும்

008

 நலமா

என்று
உன்னிடமிருந்து
குறுஞ்செய்தி வந்தபோது
மழை பெய்துகொண்டிருப்பதாக
சொல்கிறார்கள்
நனைந்துகொண்டுதானிருக்கிறேன்
என்கிற என்னை
நக்கலித்துவிட்டு
அவர்கள் நகர்ந்ததும்
நலம் என்றனுப்புகிறேன்
ஜடத்தோடு பேசுவதுணர்ந்து
கேட்கலதான்
ஆனாலும்
நாங்களும் நலம்தானென்கிறாய்
கேட்டுதான்
நலமுணரமுடியுயமென்றால்
அன்பல்ல
கணக்கென்கிறேன்
நீ சொன்ன நன்றி சொல்கிறது
"ஆறு மாசத்துக்கு காய்
சாவு சனியனே"
All reaction

Friday, May 10, 2024

மன்னர்னாலே இப்படிக் கோபப்படுறியே ஏன்டா மாப்ள?

 மன்னர்னாலே இப்படிக் கோபப்படுறியே ஏன்டா மாப்ள?

ஒரு நேர்காணல்

அநேகமா, கரண்தப்பாரோடு என்று நினைக்கிறேன்

குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறித்து சன்னமான கேள்வி

சன்னமான கேள்விதான்

அந்த சம்பவம் குறித்து வருத்தமேனும் படுகிறீர்களா?

இந்தச் சன்னமான கேள்விக்கே

கோபத்தோடு தண்ணீர் குடித்துவிட்டு

பதில் சொல்லாமல் கிளம்பிப் போய்விட்டார் மன்னர்

ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு வருத்தம்கூட கொள்வதற்கு தயங்குகிற மனிதனை நினைத்தால் கோபம்தானே வரும்

Thursday, May 9, 2024

007

 உங்க ஊர்ல

ஒரு

மன்னர் இருக்காரே

என்றுதான் 

தொடங்க வேண்டியிருப்பதாக

சலித்துக் கொண்ட கடவுளை

மூன்று வாரம் கழித்து வா

உங்க ஊர்ல

ஒரு மன்னர் இருந்தார்ல என்று

பேசலாம் என்று 

அனுப்பி இருக்கிறேன்

Wednesday, May 8, 2024

எங்களுக்குத் தெரியும் மாமன்னா

 அம்பானி அதானியிடம் சாக்கு சாக்காக ராகுல் பணம் வாங்கியதாகக் கூறுகிறீர்கள்

வாங்கியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்பது தெரியும்

போக

இன்னும் மூன்று வாரங்களுக்கு நீங்கள்தான் பிரதமர்

ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்

அம்பானி அதானி என்ன

எலாம் மஸ்கே ராகுலோடு பேசியிருக்கக் கூடும்

அல்லது பேசக் கூடும்

70 முதல் 100 விழுக்காடு கஸ்டம்ஸ் வரியை 10 விழுக்காடு என்று நீங்கள் அவருக்கு குறைத்தது மாதிரி அவரிடமும் கேட்டிருப்பார்

அல்லது கேட்பார்

அங்குதான் எங்களுக்கான போராட்டப் புள்ளி என்று

எங்களுக்குத் தெரியும் மாமன்னா

கேவலமாகத்தான் பேசுவீர்களா நிர்மலா மேம்

 ப்ரஜல் ரேவண்ணா சில நூறு பெண்களை பாலியல் ரீதியாக வீணாக்கியிருக்கிறான்

அது குறித்து கருத்து சொல்ல வந்த நிர்மலா
ரேவண்ணாவும் காங்கிரஸ் கட்சி சிவக்குமாரும் ஒக்காலிக்கா வகுப்பைச் சேர்ந்தவர்களென்றும்
அந்த வகுப்பாரின் மொத்த வாக்குகளையும் அள்ளுவதற்காகவே இந்தக் குற்றச்சாட்டு என்றும் கூறுகிறார்
ரேவண்ணா செய்த கேவலத்திற்கு சற்றும் குறைவில்லாத கேவலம் இது

006

 

உன்னோடான
உரையாடலின்
தொடக்கமாட்டம்
தொடங்கியிருக்கிறது
பெய்ய

மாமன்னருக்கும் 56

 மாமன்னர் கோவிலுக்குப் போயிருக்கிறார்

ஷாஷ்டாங்கமாக விழுந்தது தொழுவதற்கல்ல
கோவமாக இருக்கும் கடவுளிடம் மன்னிப்புக் கோர
கடவுளுக்கு என்ன கோவம்?
தன் பெயரை வாழ்த்தி எழுதியதற்கெல்லாம் மதிப்பெண் தருவதா என்ற கோவம் கடவுளுக்கு
அதற்கு திருத்தியவர் அல்லவா மன்னிப்பு கோர வேண்டும்
ஆமாம்
ஆனாலும் அவர் போட்ட மதிப்பெண் அப்படி
தனக்கும் 56
கடவுளின் பெயருக்கும் 56 தானா என்று கோவம் தன் மீது திரும்பிவிடக் கூடாது அல்லவா

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...