”நீ இல்லை
இனி எப்போதும் இல்லை
உன்னிடம் சொல்லாத
உனக்கான இந்த வார்த்தைகளை வைத்துக்கொண்டு
என்ன செய்ய?”
என்று 21.02.2024 அன்று எழுதியிருக்கிறாள் Kalai Mani.
கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஒரு மாதம் கடந்து சில நாட்களாகிவிட்டன
எத்தனை வலி?
வலியை எவ்வளவு லாவகமாக படிக்கிறமாதிரி கொடுக்கத் தெரிகிறது
பாருங்கள்,
யாருக்கான சொற்களையோ அவர்கள் இல்லாத வேளையில் சுமந்து தெரிவது எவ்வளவு அவஸ்தை
21.02.2024 அன்றே அவளடு பேசி ”எத்தனை அழகு” என்று சொல்லி இருக்க வேண்டும்
ஒருக்கால் அன்று அப்படி தட்டிக் கொடுத்திருந்தால் ஒரு நூறு பக்கங்களை அவள் எழுதி இருக்கக் கூடும்
“எத்தனை அழகு” என்ற அவளுக்கான சொற்களை சொல்லாமலே சுமந்து திரிந்திருக்கிறேன்
இளங்கோ சொல்வதுதான்
“போற்றா ஒழுக்கம்” புரிந்திருக்கிறேன்
இந்தக் கவிதையைக் கொண்டாடாத எல்லோரையும் என்பொருட்டு மன்னித்துவிடு கலை
எழுதிக் குவி
30.03.2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்