Saturday, March 1, 2025

செயலால் தந்தையை இழிவு செய்கிறது

 பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுத்திட வேண்டி சென்னையில் 28.02.2025 அன்று கோட்டையை நோக்கி பேரணி நடத்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முடிவு செய்கிறது

இதற்காக காவல்துறையிடம் அனுமதியை முறையாகக் கோருகிறது
காவல்துறையும் அனுமதி தருகிறது
மாவட்டங்களில் இருந்து பேரணிக்குப் போவதற்கான ஆயத்தங்கள் நடக்கின்றன
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் தோழர் பாப்பாத்தி அவர்களை 27.02.2025 அன்று மதியம் வீட்டுக்காவலில் எடுக்கிறது காவல்துறை
பேரணியில் கலந்துகொள்ள மாட்டேன் என்று எழுதித் தருமாறு அவரை மேன் ஹேண்டில் செய்கிறது
இது எமர்ஜென்சி காலத்தில் இந்திரா அரசாங்கம்
திமுகவைவிட்டு வெளியேறுகிறேன் என்று சொல், உன்னை விடுதலை செய்கிறேன் என்று திமுக தோழர்களை சித்திரவதை செய்ததை ஒத்திருக்கிறது
நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சச்சிதானந்தம் அவர் வீட்டிற்கு விரைகிறார்
காணொலியில் காவல்துறையினரின் அராஜகம் தெளிவாகத் தெரிகிறது
1957 இல் பெரியார் நடத்திய சட்ட எரிப்பு போராட்டத்தில் காவல்துறை இப்படித்தான் அத்து மீறியது
அது பெரியாருக்கு எதிரான வன்முறை
அதைப் புரிந்துகொள்ள முடிகிறது
இது பெரியாருடைய பேரன்களின் ஆட்சி
ஒன்று சொல்கிறேன் முதல்வர் அவர்களே
சீமான் பெரியாரை வாயால் இழிவு செய்கிறார்
இந்த அரசு இப்படி அராஜகம் செய்வதன் மூலம்
செயலால் தந்தையை இழிவு செய்கிறது
இது திராவிடத்தின் கூறுதானா என்பதை தெளிவு செய்யுங்கள்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...