ஒரு சாதாரண வழக்கு
தங்களுக்கு வரவேண்டிய கல்வி உதவித் தொகையை பள்ளி நிர்வாகம் உரிய நேரத்தில் வாங்கித் தர மறுப்பதாகவும்
பள்ளியில் கழிவறை வசதிகள் போதுமான அளவு இல்லை என்றும் பால்ராஜ் மற்றும் விக்னேஷ் என்ற இரண்டு மேல்நிலைப்பள்ளிக் குழந்தைகள் அன்றைய மார்க்சிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் வட்ட செயலாளர் தோழர் வடுகநாதனையும் அன்றைய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ரமேஷையும் அணுகுகிறார்கள்
உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்த இரண்டு பிள்ளைகளுக்கும் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து விடுகிறார்
தொடர் ஆர்ப்பாட்டம் நடக்கிறது
ஆர்ப்பாட்டம் என்றால் ஏதோ பள்ளியின் வழக்கமான நடவடிக்கைகளுக்கு எந்தவித குந்தகமும் இல்லாமல் கணியமான ஆர்ப்பாட்டம்
தலைமை ஆசிரியர் காவல் நிலையத்திற்கு புகாரளிக்கிறார்
பால்ராஜ் விக்னேஷ் ஆகிய இரண்டு குழந்தைகள்
விக்னேஷின் அம்மா பூங்கொடி
தோழர்கள் பூங்கொடி ஆகியோர்மீது வழக்கு போடுகிறார்கள்
அந்த ஆண்டே பிள்ளைகள் இருவரும் வயதின்பொருட்டு விடுவிக்கப்படுகிறார்கள்
பூங்கொடி இறந்துபோகிறார்
மாணாவர் சங்கத்தில் இருந்த Ramesh Perumaldyfi கட்சியின் மாவட்டச் செயலாளராகிவிட்டார்
அப்போது கட்சியின் எங்கள் மாவட்டத்திற்கான பொறுப்பாளராக இருந்த தோழர் Shanmugam Perumal இப்போது மாநிலப் பொதுச் செயலாளராகிவிட்டார்
மாணவர் அமைப்பின் எங்கள் மாவட்ட பொறுப்பாளராக இருந்த தோழர் G Selva இன்று ஒரு மாவட்டத்தின் கட்சி செயலாளர்
இன்று முகாந்திரம் இல்லை என்று வழக்கில் இருந்து தோழர்கள் விடுவிக்கப்படீருக்கிறார்கள்
வாழ்த்துகள்
21 வருடங்களாகப் போராடிய வழக்கறிஞர்கள் தம்பி Stalin Stalin மற்றும் அருண் ஆகியோருக்கு புத்தகமும் லட்டும் தந்தோம்
லெனின் ... என்று கைகளைப் பிடிக்கிறேன்
இதுக்கு என்னோட காண்ட்ரிப்யூஷன் என்னண்ணே என்கிறார் லெனின்
இன்னும் அவரை இறுகப் பற்றிக்கொள்கிறேன்
இந்த ஈரம் இருக்கும்வரை ஜனங்களுக்காக போராடிக்கொண்டே இருப்போம்
30.01.2025

No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்