ஒரு புத்தக வெளியீட்டு விழா
அருகில் என் நீண்டகால நண்பர்
”ஏன் எட்வின் இப்படி செய்றீங்க?” என்று தன் உரையாடலை ஆரம்பிக்கிறார்
அவ்வளவு வம்படியா சாம்சங் விஷயத்துல போராடனுமா?
ஆமாம், போராடத்தான் வேண்டும்
கூட்டணில இருக்கீங்க எட்வின்
அதனால?
இல்ல கூட்டணில இருந்துகொண்டே....
ஊழியர்களுக்கு விரோதமா அரசு செயல்படுது. எடுத்துச் சொல்கிறோம். கேட்கவில்லை. சத்தமா சொல்கிறோம். கேட்கவில்லை . நீண்டு போராடுகிறோம். பலனில்லை. நீதிமன்றம் போகிறோம். சரி செய்கிறோம்
இதில் ஒன்றும் தவறில்லை. கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக அரசோடு போராடுவது எங்கள் வேலை. அதை செய்துகொண்டிருக்கிறோம்
இப்படிப்பட்ட கட்சியோடு வெட்கமேயில்லாமல் ஏன் கூட்டணியில் ?
சரியா சொல்லு மாப்ள.., சாம்சங்கிற்காக நாங்க போராடியது உனக்குப் பிரச்சினையா? இல்லை கூட்டணியில் இருப்பது பிரச்சினையா?
மௌனமாக மாறிவிட்டார்
தொடர்ந்தேன்
மாப்ள, ஜனங்களுக்காக மாநில அரசை எதிர்த்தும் போராடறோம்.
அதுதான் அப்புறம் அந்த கட்சியோடு ஏன் கூட்டணிங்கறேன்?
கொஞ்சம் சத்தமாகவே கேட்கிறார்
அதுவும் மக்களுக்காகத்தான்
குழப்பறடா
மக்களுக்காக திமுக அரசை எதிர்க்கிறோம். அதே மக்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் ”ஒரே நாடு ஒரே தேர்தல்” பிரச்சினையில் ஒன்றிய அரசை எதிர்க்கிறோம்.
திமுகவும் இணைகிறது. பலமாக எதிர்க்கிறோம்
உங்கூட இனி பேசிப் புண்ணியமில்லை என்கிறார்
பேசுவார்
பேசுவோம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்