Sunday, March 9, 2025

”அது எப்படி பள்ளி நகரும்” என்றுகூட

 

"instead, the school should go to the student"
என்று மார்த்தி சொன்னதாகப் படித்திருக்கிறேன்
“மாறாக, பள்ளி குழந்தையை நோக்கி நகர வேண்டும் என்று இதை தமிழில் கொள்வது சரியாக இருக்கும்
"the school should go to the student" என்றால் பள்ளி குழந்தையை நோக்கி நகர வேண்டும் என்று பொருள்
"instead, the school should go to the student" என்றால் ”மாறாக, பள்ளி குழந்தையை நோக்கி நகர வேண்டும்” என்றாகிறது
முன்னது கட்டமைப்பதற்கான கோரிக்கை
பின்னது இருக்கிற கட்டமைப்பை மாற்றுவதற்கான கோரிக்கை
இருக்கிற கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்றால்,
இருப்பதில் பிழை இருக்கிறது என்று பொருள். குறைந்தபட்சம் போதாமை இருக்கிறது என்றாவது கொள்ளவேண்டியத் தேவை இருக்கிறது
எனில்,
முன்னதைவிடவும் பின்னதில் அதிக கவனம் கொள்ளப்பட வேண்டும் என்றும் பொருள்
எந்தக் குழந்தையையும், எக்காரணத்தைக் கொண்டும் விடுபடாமல் பள்ளிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதைத்தான் எல்லோரும் தங்கள் தங்கள் மொழியில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
The purpose of education is to include the excluded" என்றுதான் அமைப்புகளேகூட சிந்திக்கின்றன
ஆனால் ,
மாணவனை நோக்கி பள்ளி வரவேண்டும் என்று மார்த்தி கூறுவது பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கலாம்
சில புத்திசாலிகள்
கிண்டல் செய்யக் கூடும்
”கல்வி என்ன அவ்வளவு சல்லிசா போச்சா?”
என்று சிலர் கொதிநிலையின் உச்சத்திற்கே போகக் கூடும்
“”மலைவாழை அல்லவோ கல்வி -நீ
வாயார உண்ணுவாய் போ என் புதல்வி”
என்று பாரதிதாசனேகூட குழந்தையைத்தானே பள்ளிக்குப் போகச் சொன்னார் என்றுகூட கூறலாம்
ஆமாம், உண்மைதான்
மார்த்தி பள்ளிக்கூடம் என்ற கட்டிடத்தை நகரக் கோரவில்லை
பள்ளி என்கிற கட்டுமானத்தை நகரச் சொல்கிறார்
மார்த்தி சொன்ன ஆழத்தில்கூட இதை அணுக வேண்டாம். கொஞ்சம் கருணையோடு இப்படி அணுகவே கோருகிறோம்
பள்ளிக்கு செல்லும் வயதுடைய குழந்தைகளை எப்பாடு பட்டேனும் பள்ளிக்கு கொண்டு வரவேண்டும்தான்
ஆனால்
ஏதோ ஒரு காரணத்தால் பள்ளிக்கு வரவே முடியாதவனை என்ன செய்யலாம்?
எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று விட்டுவிடலாமா?
அவனுக்கு ஏதோ ஒரு வகையில் கல்வியைக் கொண்டுபோக வேண்டாமா? என்பதைத்தான் மார்த்தி இப்படிக் கூறுகிறார்
இளமதி கூறிய ஒரு செய்தி என்னை அந்த இடத்திலேனும் குறைந்தபட்சம் மார்த்தியின் இந்த கோரிக்கையைப் பொறுத்திப் பார்க்கக் கூடாதா என்று ஆதங்கப்பட வைத்தது
அப்போது நடந்துகொண்டிருந்த மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு ஒரு பள்ளியில் ”சொல்வதை எழுதும்” பணிக்கு இளமதி அமர்த்தப் பட்டிருக்கிறாள்
தேர்வினை எழுத இயலாதபடிக்கு உடல் பாதிப்பு உள்ள குழந்தைகள் கூறுவதைக் கேட்டு இவர்கள் அந்தக் குழந்தைகளுக்காகத் தேர்வெழுத வேண்டும்
ஒரு பார்வையற்ற குழந்தைக்கு தேர்வெழுதும் பணி மதிக்கு
அந்த தேர்வு மையத்தில் ஏறத்தாழ 20 கும் மேற்பட்ட பார்க்கும் திறனற்ற குழந்தைகள் தேர்வெழுத வருகிறார்கள்
அந்தக் குழந்தைகள் படிக்கும் பள்ளி 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது
குறைந்த பட்சம் இதுமாதிரிக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு தேர்வறைகளைக் கொண்டுபோகக் கூடாதா?

09.03.2025

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...