04.09.2024
தோழர் Babu Ganesan மகள் திருமண வரவேற்பு
பாபுவிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறேன்
காம்பவுண்டைத் தாண்டுவதற்குள் விரட்டிக்கொண்டுவந்த பாபு பிடித்து விடுகிறார்
நந்தலாலா உங்களை அவசியம் பார்க்கனுமாம். பிடித்துவைக்க சொன்னார் என்கிறார்
அது கடைசி சந்திப்பு என்றோ, இதுதான் கடைசிப் படமென்றோ தெரியாதுண்ணே
நிறையப் பேசினாய்
வேலையைச் சொல்லி கிளம்பப் பார்த்தவனை “இரு, சாப்பிட்டுட்டு கிளம்பலாம் “ என்கிறாய்
பக்கத்தில் இருக்க வைத்து சாப்பிட வைக்கிறாய்
உன்னிடம் மட்டுமே சொல்வதற்கு சில என்னிடம் உள்ளன
எனக்குத் தெரியும்
என்னக்கே எனக்கான சில சொற்களும் உன்னிடம் இருந்திருக்கும்
எத்தனையோமுறை உனக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்து அழைத்துப் போனவனுக்கு
உன் உடலுக்காக காத்திருக்க வலிக்கிறது
கிஷோர் திருமணத்தில் ஆனந்தத்தில் கலங்கினாய்
எனக்கு அழவேண்டியதில்லை நீ
04.03.2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்