இரண்டுமுறை நேரில் சந்தித்து இருக்கிறேன்
இருபதில் இருந்து இருபத்தி ஐந்துமுறை அலைபேசியில் பேசியிருப்பேன்
கொரோனா முடிந்து பள்ளிகள் திறக்கவிருந்த நேரம் இந்த சூழலில் பள்ளிகள் எப்படி செயல்படுவது அவசியம் என்று ஒரு கட்டுரை வேண்டும் என்று செம்மலர் சார்பாக தோழர் Kumaresan Asak கேட்கிறார்
“காட்பரிஸ் கல்வியும் கமர்கட் கல்வியும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தருகிறேன்
ஜூன் 2021 செம்மலரில் வருகிறது
ஜூன் இரண்டாம் வாரத்தில் ஒருநாள் அழைக்கிறார்
அந்தக் கட்டுரை குறித்து அவ்வளவு பேசுகிறார். வழக்கமாக எல்லோரையும் போலவே ”இவ்வளவ வச்சிக்கிட்டு ஏன் இப்படி ஒதுங்கிக் கிடக்க வேண்டும்” என்கிறார்
பதில் சொல்கிறேன்
காதுகொடுத்து கேட்கிறார்
பிறகு பொண்ணு த. ஜீவலட்சுமி செம்மலருக்காக கட்டுரை கேட்க அது அச்சில் வந்தபோதும் அழைத்து பேசுகிறார்
சரியாகும் எட்வின் என்கிறார்
கட்சியின் மாவட்டக்குழுவிற்கு நான் தேர்வானதும் முதலில் தமிழுக்கும் பிறகு ஆதவனுக்கும் மூன்றாவதாக நாதனுக்கும்தான் சொல்கிறேன்
”அப்பா, எவ்வளவு போராட்டம். தமுஎச பொறுப்ப எடுங்க. கோபமெல்லாம் வேண்டாம்” என்கிறார்
இதே அறிவுரையைத்தான் தோழர் தமிழும் சொல்லியிருந்தார்
எடுத்ததும் சொல்கிறேன்
அப்படி மகிழ்கிறார்
இடையில் அவரது சிறுகதை தொகுப்பு குறித்து எழுதுகிறேன்
நெகிழ்ந்கிறார்
பெரம்பலூர் இருமுறை எனக்குத் தெரிய வந்திருக்கிறார். வீடு வரவில்லை. கோபப்பட்டபோது அடுத்தமுறை வருவதாக சொல்கிறார்
என்னிடம் வாக்குத்தவறியவர்களின் பட்டியலில் நாதனும் இப்போது
போய் வாங்க நாதன்எல்லோருக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்
சத்தியமாக முடியவில்லை
நான் போகும்வரை யாரும் நகரக்கூடாது ஆமா
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்