Sunday, March 9, 2025

வணங்குவதற்கு எங்கள் வீட்டிலேயே ஒரு பிள்ளை

 

நந்தலாலாவின் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு வந்து கீழே அமர்ந்திருக்கிறோம்
அப்போது அந்தப் பக்கமாக வந்த தோழர் இளங்குமனை அழைக்கிறாள் கலைமணி
வருகிறார்
நாளைக்கு ஏதேனும் சடங்குகள் உண்டா என்று கேட்கிறாள்
தலைமாட்டில் விளக்குகூட ஏற்றப்படவில்லை
எந்தச் சடங்கும் இருக்காதுதான்
ஆனாலும் பிரச்சினை வராதமாதிரி தோழர் பதில் சொல்லவேண்டுமே என்று பயம் தொற்றிக் கொண்டது
காரணம் ஏதேனும் சடங்கு இருப்பதாக சொன்னால் விடமாட்டாள்
நாளை இங்கு ஒரு இரங்கல் கூட்டம்
வேறு சடங்கு இல்லை தோழர் என்ற பதிலில் "அப்பாடா" என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவற்குள்
அநேகமா அவரது மாப்பிள்ளை கொள்ளி வைப்பார்போல என்றார்
போல என்றுதான் சொன்னார்
பிடித்துக் கொண்டாள்
ஏன் பாரதியோ நிவேதியோ கொள்ளி வச்சா வேகாதா என்றதோடு விடவில்லை
போய் பேசுங்க தோழர் என்கிறாள்
ஏம்பா அவங்க முடிவில்லையா என்றால்
எனில் இது தப்பான முடிவென்கிறாள்
எங்கும் எதுகுறித்தும் கவலை கொள்ளாமல் பயமற்று எதிர்வினை செய்வாள்
ஆனால் எந்தவொரு சிறு சடங்கும் இல்லாமல் நந்தலாலாவின் இறுதி வழியனுப்பு நிகழ்ந்தது
இன்று மகளிர் தினம்
வணங்குவதற்கு எங்கள் வீட்டிலேயே ஒரு பிள்ளை
வணக்கம் கலை

08.03.2025

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...