லேபில்

Saturday, May 9, 2015

குட்டிப் பதிவு 37

விக்டோரியாவின் கண்ணாடி உடைந்து விட்டது. நன்கு பழக்கமான விஷன் ஆப்டிகல்ஸ் போயிருந்தோம். கண்ணாடிய மாத்தியே ஆகனும். எதற்கும் கொஞ்சம் பரிசோதித்துக் கொள்ளலாமே என்றார் ஆப்டிகல்ஸ் தம்பி. நம் மீது உள்ள அன்பில் அவரே விக்டோரியாவை பக்கத்தில் இருக்கும் மருத்துவர் கருப்பையா அவர்களிடம் அழைத்துக் கொண்டு போனார்.
அலைபேசியை அணைத்துவிட்டு நானும் உள் நுழைந்தேன். விக்டோரியாவை சோதித்துக் கொண்டிருந்த மருத்துவர் கொஞ்சம் எழுவதுபோல் பாவித்து கை கூப்பி வணங்கினார்.
ஆச்சரியமாயிருந்தது. இன்றுதான் பார்க்கிறேன் அவரை. சோதித்து முடித்து ப்ரெஸ்கிரிப்ஷன் அட்டையை வாங்கிக் கொண்டு பர்சை எடுத்த போது வேண்டாம் சார். எழுத்தாளர்ட்ட எல்லாம் காசு வாங்கறதில்ல என்கிறார்.
ஆமாம் அப்ப வாசிக்கிற மாதிரிதான் எழுதறோம் போல

8 comments:

 1. Replies
  1. மிக்க நன்றிங்க தனபால்

   Delete
 2. அட! இப்படியும் சில நல்ல உள்ளங்கள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க தோழர்

   Delete
 3. எங்கூர்ல டாக்டர் என்கிட்டே பணம் வாங்கிடறார் சார்!

  ReplyDelete
  Replies
  1. என்னிடமும் எல்லா மருத்துவர்களும் வாங்கவே செய்கிறார்கள் தோழர். இவர்தான் ஏதோ பாவம் எழுதறானே என்று இரக்கம் காட்டியுள்ளார்

   Delete
 4. இல்லைங்கலா பின்ன ......நாங்களும் வாசிக்கின்றோமே !

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க தோழர்

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023