Sunday, May 17, 2015

அய்யம்

நான் தொல்காப்பியம் எல்லாம் படித்தவன் இல்லை. ஆனால் கீழே உள்ளது தொல்காப்பியத்திலிருந்து என்று அறிகிறேன்.
“ ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே
தா என் கிளவி ஒப்போன் கூற்றே
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே”
எனில்,
இழிந்தவன் தன்னைவிட உயர்ந்தவனிடம் ஒரு பொருளை வேண்டிக் கேட்பதற்கு ”ஈ” என்ற சொல்லையும், தனக்கு சம நிலையில் இருப்பவனிடம் கேட்கும்போது “ தா” என்று கேட்க வேண்டும் என்றும், உயர்ந்தவன் தன்னைவிட தாழ்ந்தவனிடம் கேட்குமொபோது “ கொடு” என்று கேட்க வேண்டும் என்றும் ஆகிறது.
எனில்,
இழிந்தவன், ஒப்போன், உயர்ந்தவன் என்பது சாதியப் படிநிலைகளைக் குறிப்பதாகத்தான் எனக்குப் படுகிறது.
எனில்,
சாதிக்கொரு வார்த்தையை தொல்காப்பியம் பரிந்துரைப்பதாகவே படுகிறது.
அது அப்படித்தான் எனில் சொல்கிறோம்,
“ குற்றம் குற்றமே”
அல்லது இதற்கு வேறு ஏதும் பொருளிருப்பின் சொல்லுங்கள் சரியாயிருப்பின் ஏற்கிறோம்.

11 comments:

  1. மன்னிக்கவும்.
    மிகவும் தவறான விளக்கம்.
    சாதிக்கும் ஈ, தா, கொடு என்பதற்கும் முடிச்சு போடுவது மிகவும் தவறு.
    “ஈயெனெ இரத்தல் இழிந்தன்று.
    ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று”

    என்றும் தமிழில் பாடல் உண்டு.

    ஈ என்றால் பிச்சை எடுப்பது. தமிழில் நீ, நீங்கள் என்றும் உண்டு. இப்படி இருப்பதையும் சாதிதான் கொண்டு வந்தது. இதுவும் ஆங்கிலம் போலத்தான் இருக்கவேண்டும் என்று கூறுதலுக்கு ஒப்பானது தங்களின் விளக்கம்.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்க எல்லாம் எதுவும் இல்லை தோழர். சரியான தகவல் கிடைத்தால் எடுத்துக் கொள்ளவே செய்கிறேன். பிரச்சினை என்னவெனில் இங்கு ஆங்கிலத்தோடு ஒப்பிடவெல்லாம் இல்லை. ஆங்கிலம் போலும் இருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. ஆங்கிலத்தை விட சொற்களை குவித்து வைத்திருக்கிற மொழி தமிழ். “உவன்” என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் இல்லை.

      கேள்வி என்னவெனில் ஒரே விஷயத்தை உயர்ந்தோன் ஒரு சொல்லிலும், தாழ்ந்தோன் ஒரு சொல்லிலும், ஒப்போன் ஒரு சொல்லிலும் விளிக்க வேண்டும் என்பது ஏன் என்பதே.

      ஒரே விஷயத்தை ஒப்போனது வார்த்தையில் ஏன் தாழ்ந்தோன் விளிக்கக் கூடாது?

      சரியாக வந்தால் ஏற்கவே செய்வோம். இது அய்யம் மட்டுமே.

      Delete
  2. இப்படியொரு சம்பந்தம் இருக்கிறது என்பதை நினைத்தே பார்க்கவில்லை...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தனபால்

      Delete
  3. நல்ல விவாதத்தைத் தொடங்கியமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete
  4. உங்கள் பொருள்தான் சரி என்று தோன்றுகிறது! வேறு இருப்பதாகத் தோன்றவில்லை!

    ReplyDelete
  5. உங்கள் பொருள்தான் சரி என்று தோன்றுகிறது! வேறு இருப்பதாகத் தோன்றவில்லை!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  6. இதை ஒரு சாதிய கண்ணோட்டதோடு என்னால் பார்க்க முடியவில்லை ....இது வயதுக்கும் , மனித உறவுகளுக்குள் இருக்கும் உரிமையின்பால் படும் ஏற்ற தாழ்வுகளை பற்றி மட்டும்தான் குறிக்கிறது என்பது எனது கருத்து ....

    ReplyDelete
    Replies
    1. இல்லீங்க தோழர், ஒப்போன், தாழ்ந்தோன் உயர்வோன் என்றிருக்கிறது. ஒரு காலத்தில் எல்லா ஜாதிக் காரர்களும் தங்கள் குழந்தைகளுக்கு விரும்பிய பெயரை வைக்க முடியாத நிலை இருந்தது. அப்படியொரு கட்டுமானம் இருந்தது தோழர். பார்ப்போம் யாரேனும் சொல்லக் கூடும். கற்ருக் கொள்வோம்.

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...