Monday, May 11, 2015

அம்மாவின் திருமணம்

தோழர் கனிமொழி (Kanimozhi MV​ ) அவர்களிடம் இருந்து முகநூல் நட்புக் கோரிக்கை வந்திருந்தது. தோழரைப் பற்றி தெரிந்து கொள்வோமே என்பதற்காக அவரது பக்கத்துள் நுழைந்தேன். உள்ளே போகப் போக இவர் எப்படி இவ்வளவு நாள் நம் பார்வைக்கு தட்டுப் படாமல் போனார் என்று வியந்தேன். அவரது பதிவுகள் மட்டுமல்ல அவர் தேர்ந்தெடுத்து பகிர்ந்திருக்கும் பதிவுகளும் மிக மிக ஆழமானவை.

Nelson Xavier​  என்ற தோழரின் பதிவொன்றை அவர் பகிர்ந்திருந்தார். அம்மாடி , அப்படி ஒரு பதிவு. எத்தனை நடக்கிறது நமக்குத் தெரியாமலே நம்மைச் சுற்றி.

தெரு முக்கத்து தேநீர்க் கடையில் வெங்காய பக்கோடாவுடனான உரையாடலில் தனது அம்மாவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும், ஏதாவது நல்ல மனிதர் கிடைத்தால் சொல்லுமாறும் அவரது தோழன் கேட்டதாக நெல்சன் பதிகிறார். இதை படிக்கும் போது நமக்கே ஆச்சரியத்தின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. என்றால் அதை அருகிருந்து கேட்ட நெல்சனுக்கு எப்படி இருந்திருக்கும்?

நான்கு ஆண்டுகளாக விதவையாக இருக்கும் தனது அம்மாவிற்கு இப்போது 37 வயதுதான் என்றிருக்கிறார். 20 வயதே ஆன தனக்கே உடலின் அவஸ்தை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதாக சொல்லியிருக்கிறார். எனில் 37 வயதில் தனது தாயாருக்கு எவ்வளவு கஷ்டம் என்பதை உணருகிறார். தன் அம்மாவிற்கு திருமணமானால் அந்த மனிதரை சித்தப்பா என்றோ பெரியப்பா என்று அழைத்துக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.

சொன்னது போலவே தனது தாயை சம்மதிக்க வைத்து மனைவியை இழந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து அவரை சித்தப்பாவாக ஏற்கிறார். சித்தப்பனும் பிள்ளையும் கேரம் விளையாடுகிறார்கள் ஓய்வில்.

இந்த மண்ணில் இவ்வளவு உன்னதமான காரியம் நடக்கிறது என்றால் அதைக் கொண்டாட வேண்டாமா? கொண்டுபோக வேண்டாமா?

முயற்சிக்கிற மாதிரி கடுமையாக முயற்சித்தால் முடியும்தான்.

நெல்சனிடம் ஒரு வேண்டுகோள் நமக்கு,

அந்த இளைஞனை அவனது சித்தப்பாவை, அம்மாவை பார்க்க வேண்டுமே.

6 comments:

  1. இது உண்மை நிகழ்வா கற்பனையா. பல கற்பனைகள் உண்மைபோல் தோன்றும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சத்தியமாய் உண்மை தோழர். நெல்சன் எனது முக நூலில் பின்னூட்டம் இட்டிருக்கிறார். நெசத்துக்குமே வாழ்த்தலாம்

      Delete
  2. இது போன்று நடக்கும் காலங்கள் வரவேண்டும் ! வரவேற்கிறோம் ...

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஒரு காலத்தை கொண்டுவர முயற்சிப்போம்

      Delete
  3. உடலின் அவஸ்த்தையை உள்ளம் உணர்ந்ததனால் உலக வழக்கத்தை உடைத்துபோட்ட உத்தமருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...