பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்ததும் நிறைய பேர் தனது பிள்ளைகளின் மதிப்பெண்களைப் பகிர்ந்து சிலாகித்திருந்தனர். ஆயிரத்திற்கும் குறைவாகவே பெற்றாலும் மனப்பாடம் செய்யும் பழக்கம் இல்லாது எதையும் புரிந்து கொண்டு படித்த தன் மகனை உச்சி முகர்ந்து கொண்டாடும் ஒரு தந்தையின் (அருள்மொழி சின்னசாமி) பதிவு இது
***************************************************************************
என் மகனை இன்று வாாியணைத்து முத்தமிட்டேன் நான்...
உணர்ச்சிப் பெருக்குடன்...
தேர்வு முடிவுகளில் இவன் பெற்ற
மதிப்பெண் ஆயிரத்திற்கும் குறைவு....
சுயசிந்தனை உள்ள மகன்....
மனப்பாடங்களை மறுதலித்து இருக்கிறான்....
வாழ்க்கையில் வெற்றி பெற்று விடுவான்...
சூளுரைக்காத எதிர்கால சாதனையாளன் என் மகன்....
அவனுக்கு என் வாழ்த்துக்கள்....!!!
அருமை ஐயா...
ReplyDeleteமிக்க நன்றிங்க தனபால்
Delete