Wednesday, May 6, 2015

ஹலோ எஃப் எம் 06.05.2015

மருத்துவமனையிலிருந்து வீடு வந்து படுக்க நான்கு மணிக்கும் மேலாயிற்று. நல்ல அசதி.

அலைபேசி சிணுங்களில்தான் எழுந்தேன். "ஹலோ எப் எம்" மிலிருந்துதான் அழைப்பு.

" கூடங்குளம் தீர்ப்பு எப்படி வருமென்று எதிர்பார்க்கிறீர்கள்? "

எப்படி வருமென்று தெரியும்தான். ஆனாலும் எப்படி வர வேண்டும் என்ற என் ஆசையை இப்படிக் கொட்டி வைத்தேன்.

" 14000 கோடி செலவு செய்தாகி விட்டது என்பதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நீதிமன்றம் இந்த இரண்டையும் கணக்கிலெடுத்து தீர்ப்பளிக்கும் என்றேன்.

1 ) 14000 கோடி செலவில் செய்யப் பட்டது என்பதற்காக எம் மக்களை அந்த சவப்பெட்டியில் படுக்கச் சொல்ல முடியாது.

2 ) ஆறரை ரிக்டர் அளவு வரையிலான நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் உலை கட்டமைக்கப் பட்டுள்ளது என்பதையும் ஒருக்கால் ஏழு ரிக்டர் அளவில் வந்தால்? என்ற அய்யம் தள்ளுபடி செய்யச் சொல்கிறது.

இப்படியே ஒரு தீர்ப்பு வந்துவிட்டால ..?

நீதி இன்னும் சாகாமல் இருக்கிறது என்று கொண்டாடலாம்.

2 comments:

  1. அதை விடுங்கள் ...கூடங்குளம் விவகாரத்தில் எனது கருத்து ...இது போன்ற கட்டமைப்புகள் , நாட்டின் பிற்கால முன்னேற்றம் சார்ந்து வருவதும் வளரவும் வேண்டும் ...இப்படி எதிர்ப்பு காண்பித்து முழுவதுமாக இழுத்து மூடுவது கூடாது ....ஆனால் , அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் Design... Safety...போன்றவைகள் என்பது உங்கள் போன்ற போராளிகள் ஏற்படுத்தும் தாக்கத்தினால் கணக்கில் கொள்ளபடுகிறதா என்பது மிக முக்கியம் ....அப்படி இருக்கும் பட்சத்தில் இவைகள் அனுமதிக்கப்பட்டு இயங்குவது விரும்பத்தக்க ஒன்றாகும் ....ஏனெனில் நான் வசிக்கும் UK.. சிறிய நாடாக இருந்தாலும் மிக அதிகமான அணு சக்தி உலைகளின் மூலம் மின்சாரம் தயார் செய்கிறது ...மேலும் புதிய கட்டமைப்புகளுக்கும் அனுமதி கொடுத்துள்ளது ...ஆயினும் நீங்கள் இதிலிருந்து கருத்து வேறுபடுவது என்பது உங்கள் உரிமை ...சொல்லுவது என் கடமை என நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர். கூடங்குளம் கரண்டு ஆபீஸ் என்கிற எனது கட்டுரையின் இணைப்பை உங்களது வலைதளத்தின் பின்னூட்டத்தில் வைத்திருக்கிறேன். இங்கும் தருகிறேன். அருள் கூர்ந்து வாசியுங்கள். பேசுவோம்.
      http://www.eraaedwin.com/2011/12/blog-post_29.html

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...