முகநூலில் பதியப்பட்ட தங்கம் குறித்த பதிவுகளில் என் பார்வைக்கு பட்டவற்றுள் இந்த இரண்டையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
1 எங்கள் இளைஞர்கள்தான் அதிகம் தங்கம் வெல்கிறார்கள் திருமண நேரங்களில் என்பது மாதிரி Ram Duraiஎழுதியிருந்தார். வெல்கிறார்களா பிச்சை எடுக்கிறார்களா என்ற கேள்வி இருந்தாலும் வெகுவாக ரசிக்க முடிந்தது.
2 தங்கத்தை உரசிப் பார்க்கிற மாதிரி யாரும் தகரத்தை உரசிப் பார்ப்பதில்லை என்பது மாதிரி அதிஷா அதிஷாஎழுதியிருந்தார். வெகுவாக ரசித்தேன்.
ஒருக்கால் தகரமளவிற்கு தங்கமும் தங்கம் அளவிற்கு தகரமும் பூமிக்கு கீழே கிடைக்குமானால் தங்கத்தை அல்ல தகரத்தைதான் உரசிப் பார்ப்போம்.
நினைத்துப் பாருங்களேன் அப்போது தங்கத்தோடு எதையாவது சேர்த்து இறுக வைத்து வாளி குவளைகளும் தகரத்தில் மோதிரமும் செய்திருப்போம். அடகு கடைகளிலும் வங்கிகளிலும் தகர நகைகளுக்கு கடன் கொடுத்திருப்பார்கள்.
நூற்றுக்கு நூறு உண்மை.
ReplyDeleteமிக்க நன்றிங்க அய்யா
Deleteஉண்மை தோழர்
ReplyDeleteதம 3
மிக்க நன்றி தோழர்
Delete