கப்பலா, படகா, இல்லை படகுக் கப்பலா? அதன் பெயர் என்னவென்று தெரியவில்லை. பசி, தாகம், அழுகை, கதறல், உயிரின் வாதை போன்றவைகளால் நிரம்பிக் கசிகிறது அது. எந்தக் கரையிலும் இரக்கமேயில்லை.
எரிபொருள் இருக்கும் வரை இயக்கலாம் அதனை. பிறகு, அலைகள் இழுக்கும் திசை இழுபட அனுமதிப்போமா?
கடவுள்கள் இல்லை. ஒருக்கால் அப்படி யாரேனும் இருப்பின் இத்தனை கொடுமைகளையும் வேடிக்கை பார்த்தமைக்காக அவர்களைக் கொன்று போடலாம்.
எந்த மெசையாவும், அவதாரமும், தூதரும் எதுவும் செய்துவிட இயலாது.
நமது அரசாங்கங்களை தலையிடவும் தடுத்து நிறுத்த அந்த அரசை நிர்ப்பந்திக்கவும் நிர்ப்பந்திப்போம்.
அதற்கென்ன செய்யலாம்?
causes என்று ஒரு தளம் இருக்கிறது அதில் இணையத்தில் பெட்டிசன் எழுத வழியிருக்கிறது ..
ReplyDeleteபார்ப்போம் ஐநாவிற்கு அனுப்பவும் முடியும்...
முன்கை எடுங்கள் தோழர். என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் செய்யலாம்
Delete