மதிப்பெண் விவரம் தெரிந்ததும் அப்பாயியை பார்க்கப் போயிருக்கும் கீர்த்தனாவிற்கு அலை பேசி 491 எடுத்திருக்கும் விவரம் சொன்னேன்.
சலனமேயில்லாமல் சரிப்பா என்கிறாள்.
இப்படி பேச வாய்ப்புத் தராம முடிக்கிறாளே. என்ன செய்வது என்று தெரியவில்லை.
“ பாப்பா பெரிய சிஸ்டர், சிஸ்டருங்க, மிஸ்ங்க எல்லாம் அழைத்துட்டுட்டு வரச் சொல்றாங்க எப்படா வர?” என்கிறேன்.
“ வேணாம்பா. அடுத்த வாரம் போய் பார்க்கிறேன். போனா மண்டைய ரொப்பாம விட மாட்டாங்க. காலாண்டுப் பரிட்சையும் முழு ஆண்டுப் பரிட்சையும் ஒன்னுதாம்ப்பா”
என்ன பேசுவதென்றுப் புரிய வில்லை. “ அண்ணன் பேசினானாடா?”
“ பேசினான்”
“என்ன சொன்னான்?”
.” நாமக்கல் பன்னைக்கெல்லாம் வேணாண்டி. இங்கதானே இந்த மார்க் கிடச்சுது. இங்கயே படி. லெவன்த் பாடம் முக்கியம் னான் பா”
491 அல்ல என் மகிழ்விற்கு காரணம். குழந்தைகளின் இந்தப் பக்குவமே என்னை மகிழ்விக்கிறது.
பக்குவப் படுத்திய பள்ளிகளுக்கும் ஆசிரியத் தோழர்களுக்கும் குழந்தைகளின் நண்பர்களுக்கும் நன்றி சொல்கிறேன்.

''491 அல்ல என் மகிழ்விற்கு காரணம். குழந்தைகளின் இந்தப் பக்குவமே என்னை மகிழ்விக்கிறது.
ReplyDeleteபக்குவப் படுத்திய பள்ளிகளுக்கும் ஆசிரியத் தோழர்களுக்கும் குழந்தைகளின் நண்பர்களுக்கும் நன்றி"
அப்படியே வளரும் நல்ல சூழலை உருவாக்கித்தந்த பெற்றோருக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
மிக்க நன்றிங்க அண்ணா
Deleteவளர்ப்பு என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்...
ReplyDeleteபாராட்டுகள் + வாழ்த்துகள் ஐயா...
மிக்க நன்றிங்க தோழர்
Deleteஇவ்வாறான பக்குவமே இப்போதைய குழந்தைகளுக்குத் தேவை. இப் பக்குவம் நம்மைகூட கட்டுப்படுத்திவிடும் போலுள்ளது. அத்தகு பக்குவத்தைப் பெற்ற அக்குழந்தை மென்மேலும் வாழ்வில் சிந்திக்கவும், சாதிக்கவும் மனம் நிறைந்த பாராட்டுகள்.
ReplyDeleteமிக்க நன்றிங்க அய்யா
Deleteஇப்படி ஒரு சூழலில் வளர்த்த தாங்கள் பாராட்டிற்கு உரியவர் தோழர்
ReplyDeleteமனம் மகிழ்கின்றது
கீர்த்தனாவிற்கு மனம் நிறை நல் வாழ்த்துக்கள்
குடும்பத்தோடு ஒரு சிறு சுற்றுலா சென்று வந்தமையால், கடந்த சில நாட்களாக, வலையின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க இயலவில்லை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன். இனி தொடர்வேன்
தம 3
மிக்க நன்றிங்க தோழர்
Deleteமுதல் முறையாக தங்களின் வலைதளத்திற்கு வந்துள்ளேன். மதிப்பெண் குறித்த அருமையான பதிவு.
ReplyDeleteஇங்கு மதிப்பெண் என்பது மனப்பாடம் பண்ணும் திறமையைப் பொறுத்தே கிடைக்கிறது. சிந்திக்கும் திறனுக்கல்ல. அதே நேரத்தில் மதிப்பெண் தான் இங்கு நல்ல வேலையை பெற்று தருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
தொடர்கிறேன். த ம 4
மிக்க மகிழ்ச்சி தோழர். கல்வி குறித்து உரையாடுவோம் தோழர்.
Delete