இன்று காலை ஏழு மணிக்கு என்னை எழுப்பிய செல்வம் புதிய தலைமுறையில் எனது பதிவு ஒன்று புகைப் படத்துடன் வந்திருப்பதாகச் சொன்னான்.
ஏட்டரை மணி வாக்கில் என் தம்பியின் வகுப்புத் தோழன் அழைத்து புதிய தலைமுறையில் பார்த்ததாக சொன்னான். சற்று நேரத்திற்கெல்லாம் ஆளவந்தார் இதே தகவலோடு பேசினார்.
இடையில் பொன்மலை ராஜா இதே தகவலோடு வந்தான்.
மதியம் கல்விச்சோலை தேவதாஸ் Kalvisolai Devadosskk"என்னன்னா கலக்குறீங்க. பூனைக்கு மணியக் கட்டீடிங்க அண்ணா” என்கிறான்.
Geevee Kavi புதிய தலைமுறையில் பார்த்தேண்டா மாப்ள என்கிறான்.
Kannamma Vijayaraj காலை எட்டு மணிக்கே பார்த்துட்டேனே என்று எழுதுகிறார்.
புதிய தலைமுறை கொடுப்பா என்று கேட்டதும் கடைக்காரத் தம்பி எட்டாம் பக்கத்துல இருக்குங்க அண்ணே என்ற தகவலோடு தருகிறான்.
இவைதாண்டி 20 அழைப்புகள்.
மண்டை காய , கண்களெரிய, உடல் வலிக்க வலிக்க உட்கார்ந்து எத்தனையோ நூறு பக்கங்களை எழுதியிருப்போம். அதற்குரிய வீச்சும் ஆழமும் வேறுதான்.
வெகுஜன ஊடகத்தில் ஒரு சின்ன பதிவு இப்படி ஒரு வெடிப்பைத் தருகிறதே. இப்படித்தான் கல்கியில் கதை வரும் ஒவ்வொரு முறையும் நடக்கிறது.
வெகு ஜன ஊடகங்களில் எழுதுவதில்லை என்கிற என் விரதம் பைத்தியக் காரத் தனமோ என்று படுகிறது. சிற்றிதழ்களுக்கு எழுதியது போக கொஞ்சம் நேரத்தை வெகுஜன ஊடகங்களுக்கு ஒதுக்கலாமோ என்று தோன்றுகிறது.
சிற்றிதழ்களுக்குத் தங்களின் எழுத்து அவசியத் தேவை
ReplyDeleteஆனாலும் வெகுஜன ஊடகங்கள்தானே தங்களின் எழுத்தை, எண்ணத்தை
அதிக எண்ணிக்கையிலான மக்களிடம் கொண்டு சேர்க்கும்
எழுதுங்கள் தோழர்
நன்றி
தம 2
எழுத வேண்டும் தோழர். வுங்களது வலையை என் முகப்பு பக்கத்தில் வைத்து விட்டேன். இனி தினமும் வாசிக்கலாம். வைக்கத் தெரியாமல்தான் இவ்வளவு காலம் வைக்கவில்லை
Delete