எப்படி சொல்வதென்று தெரியவில்லை.
வம்புக்கு இழுத்து விளையாடும் போதெல்லாம் கீர்த்தி சொல்வாள்,
“ஏம்மா இந்த லூசு அப்பாவ டைவர்ஸ் பண்ணி வீட்ட விட்டு விறட்டேன்மா. ஒரே இம்சையா இருக்கு”
கிஷோர் அந்த நேரங்களில் இருந்தால் இடைமறித்து சொல்வான்,
“வீட்ட விட்டுகூட விறட்ட வேணாம். நாம வேணாலும் வாடக வீட்டுக்கு போய்க்கலாம். வக்கீலுக்கு காசு வேணும்னா முத்தண்ணன்கிட்ட வாங்கிகலாம்”
இப்படி சொல்லும் பிள்ளைகள் நேரா நேரத்துக்கு தவறாமல் கேட்பார்கள்,
“அப்பா, சாப்ட்டியாப்பா?, மாத்திரைய ஒழுங்கா போட்டியாப்பா?,”
குடும்பத்தில் இருக்கிறது தோழர்.
இத்தனை வருட குடும்ப வாழ்க்கையில் எதையும் சாதிக்க வில்லை.
எங்கள் குடும்பத்து மதச் சாயல் இல்லாத பெயர்களாக குழந்தைகளுக்கு வைத்திருக்கிறேன்.
தமிழ்ப் பெயராக இல்லை என்பதில் வருத்தமே. ஆனாலும் பகத்தோடு சிறை பட்ட அவனது தோழனான கிஷோரிலால் என்பவனின் நினைவாக பையனுக்கு கிஷோர் என்றும், இசை , புகழ் என்று பொருள்படும் கீர்த்தி என மகளுக்கும் பெயர் வைத்தேன்.
ஊர் ஊருக்கு போய் தமிழ் வழிக் கல்வி குறித்து பேசுவது போலவே பிள்ளைகள் இருவரையும் தமிழ் வழியில் படிக்க வைக்கிறேன்.
பிள்ளைகளிடம் தோழனாகவே பழகுகிறேன்.
என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை தோழர்களே சொல்லிக் கொள்வதற்கு.
எனக்கும் சந்தேகமே, இவ்வளவு காலம் என்னை விவாகரத்து செய்யாமல் எப்படி விட்டுவால் என்னோடு குடும்பம் நடத்த முடிகிறது என்று.
19 ஆண்டுகள் முடிந்து இருபதாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்தப் பொழுதில் சன்னமாக வழியும் கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்தபடி விக்டோரியாவை கை குவித்து வணங்கிக் கொள்கிறேன்.
பின் குறிப்பு
************
இன்று 23 ஆண்டிஇற்குள் நுழைகிறோம்

//இன்று 23 ஆண்டிஇற்குள் நுழைகிறேன்//
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பர்களே(விட்டு மற்றும் நீங்கள்).
மிக்க நன்றி தோழர்
Deleteவாழ்த்துக்கள் தோழர்
ReplyDeleteபிள்ளைகளோடு தோழமையோடு பழகும் தந்தை
தமிழ் வழியில் படிக்க வைக்கும் தந்தை
தந்தையென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் தோழர்
தங்களக்கும், தங்களின் துணைவியாருக்கும்
குழந்தைகளுக்கும் இனிய நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில்
பெரிதும் மகிழ்கின்றறேன் தோழர்
தம 2
மிக்க நன்றி தோழர்
Delete