கீர்த்தனா ஏதோ ஒரு தொடர் பார்த்துக் கொண்டிருந்தாள். விசாரித்தபோது " மறுமணம் " என்று சொன்னாள்.
நானும் அவளருகே அமர்ந்தேன்.
ஒரு யுவதியின் கையை இளைஞன் ஒருவன் பிடித்துக் கொண்டிருந்தான்.
அவள் " கையை விடுங்கள், கையை விடுங்கள் " என்று கத்திக் கொண்டிருந்தாள்.
அவன் அப்படியே பேதலித்துப் போனவனாய் நின்று கொண்டிருந்தான். கையை விடவும் தோன்றாதவனாய் பட்டது.
" இங்க பாருங்களேன் ,ஏங்கையைப் பிடித்துக் கொண்டு விட மாட்டேங்கறார் " என்று அந்தப்
பெண் கத்தவே கூட்டம் கூடிவிடுகிறது.
பெண் கத்தவே கூட்டம் கூடிவிடுகிறது.
ஆளாளுக்கு அந்த இளைஞனை வறுத்து எடுக்கிறார்கள். போலீஸைக் கூப்பிடப் போவதாக ஒருவர் மிரட்டுகிறார். சிலர் தாக்க நெருங்குகிறார்கள்.
" அவங்க என்னோட மனைவிங்க " என்று அவன் சொன்னதும் எல்லோரும் ஒரு கணம் உறைந்து போகிறார்கள்.
" ஏம்ப்பா வொய்ப்னாலும் அவ கையப் பிடிக்காதன்னா பிடிக்கக் கூடாதுதானேப்பா. ஏன் அதை யாரும் உணரவேயில்ல"
கீர்த்தனா சரியாக வளர்ந்து வருவதாகவே படுகிறது.
புரிதலும் சரி தான்...
ReplyDeleteஆமாம் தோழர். மிக்க நன்றி
Deleteமனைவியானாலும் , கேட்டுதான் தொட வேண்டும் ....இந்த புரிதல் ஆணுக்கு இருப்பது அழகு ....ஆணுக்கு என்ன தேவை என்பது கேட்டு பெண் செய்தால் அழகுக்கு அழகல்லவா ?
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Deleteஉண்மைதான் தோழர்
ReplyDeleteசரியாகத்தான் வளர்த்து வருகிறீர்
மிக்க நன்றிங்க தோழர்
Deleteசரியாகத்தான் வளர்கிறாள்...
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Delete