எது கவிதை?
யாருக்குத் தெரியும்
என்பான் சுகதேவ். ஆமாம், எது கவிதை என்று எவராலும் அறுதியிட்டு சொல்ல முடியாது. ஆளாளுக்கு ஒரு அபிப்பிராயம். நாம் சிலாகித்து எழுதிய கவிதை கண்டு கொள்ளாமல் போவதும் கசக்கி எறிந்துவிடலாமா என்று நாம் வெகுவாய் யோசித்த கவிதை கொண்டாடப் படுவதும் இயல்புதான்.
யாருக்குத் தெரியும்
என்பான் சுகதேவ். ஆமாம், எது கவிதை என்று எவராலும் அறுதியிட்டு சொல்ல முடியாது. ஆளாளுக்கு ஒரு அபிப்பிராயம். நாம் சிலாகித்து எழுதிய கவிதை கண்டு கொள்ளாமல் போவதும் கசக்கி எறிந்துவிடலாமா என்று நாம் வெகுவாய் யோசித்த கவிதை கொண்டாடப் படுவதும் இயல்புதான்.
எப்படி கவிதை எழுதுவது என்று வகுப்பெடுப்பவர்களைப் பார்த்தால் பிறகு எப்போதாவது நேரம் கிடைக்கிறபோது அவர்களுக்காக சிரித்துக் கொள்வேன்.
ஆனால் கவிதை தோன்றியவுடன் எழுதிவிட வேண்டும் என்று தம்பி கடங்கநேரி யான் சொல்கிறான்.
“தோன்றிய உடனே
கவிதையைக்
கொட்டித் தீர்த்துவிட வேண்டும்
அல்லது
அதிகபட்ச வார்த்தை
அலங்காரம் சேர்ப்பதில்
தொலைந்து விடுகிறதுகவிதை”
(நிராகரிப்பின் நிழலில், 17 ஆம் பக்கம், தகிதா பதிப்பகம்)
கவிதையைக்
கொட்டித் தீர்த்துவிட வேண்டும்
அல்லது
அதிகபட்ச வார்த்தை
அலங்காரம் சேர்ப்பதில்
தொலைந்து விடுகிறதுகவிதை”
(நிராகரிப்பின் நிழலில், 17 ஆம் பக்கம், தகிதா பதிப்பகம்)
அவசரப்படாமல் கொஞ்சம் பழுக்கப் போடுங்களேன் என்பார் ரகுமான். சரியோ என்றுகூடத் தோன்றியது. இந்தப் பையனின் கவிதையைப் படித்தவுடன் கொஞ்சம் குழம்பினாலும் இவன் சொல்வதுதான் சரி என்று படுகிறது.
கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டால் ஒடுக்கப் பட்ட மக்களுக்கான கவிதை கூட நீர்த்துப் போகும் அபாயம் இருக்கவே இருக்கிறது. ஒரு உதாரணத்தோடு இதை அணுகினால் விளங்கும் என்று படுகிறது.
ஒடுக்கப் பட்ட மக்களுக்கான எங்களின் தேசிய கீதம் தோழர் இன்குலாப் எழுதிய ”மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா”
கோவம் கொப்பளிக்க கொப்பளிக்க கொட்டியிருப்பார். அதில் ஒரு வரி வரும்,
“ நாங்க எரியும் போது எவன் மசிர புடுங்கப் போனீங்க”
இதையே செய் நேர்த்தி வார்த்தை ஜாலம் எல்லாம் போடுபவன் கையில் கிடைத்து செப்பனிடுகிறேன் என்று கால அவகாசம் எடுத்துக் கொண்டான் எனில் அவன்,
“நாங்க எரியும் போது எவன் முதுக சொரியப் போனீங்க” என்று கூட எழுதியிருப்பான்.
இன்குலாப் மக்கள் கவி. அதனால்தான் எந்த வித பௌடரும் பூசாமல் நெருப்பாய்க் கொட்டினார்.
வடிவம் முக்கியமல்ல நெருப்புக்கு. எந்த வடிவமேயாயினும் நெருப்பு அழகாய்த்தானிருக்கும். வடிவமல்ல சூடுதான் நெருப்பின் குணம்.
அகம் எழுதும் எங்களுக்கு என்று யாரேனும் கேட்டால் அகமும் நெருப்புதான், அன்பும் நெருப்புதான்.
அதனால்தான் அம்ரிதா “ குருதியின் வெப்பத்திலிருந்து பிறப்பது கவிதை” என்றார்.
கையேந்தித்தான் கேட்கிறோம் , “ சுடச் சுடக் கொடுங்கள்”
உனது ஏழு வரி சின்னக் கவிதை எங்கெல்லாமோ என்னை இழுத்துப் போகிறது.
சபாஷ்டா தம்பி
“தோன்றிய உடனே
ReplyDeleteகவிதையைக்
கொட்டித் தீர்த்துவிட வேண்டும்
அல்லது
அதிகபட்ச வார்த்தை
அலங்காரம் சேர்ப்பதில்
தொலைந்து விடுகிறதுகவிதை,,நிதர்சனமான உண்மை .சில நேரம் இயல்பை இழந்தும் விடுகிறது ..அருமை சகோ..
மிக்க நன்றி தோழர்
Deleteகவிதை ...கடங்கநேரி யான் போலவே வெகு இயல்பு..உண்மையும் கூட..
ReplyDeleteமிக்க நன்றி சசி
Delete