லேபில்கள்

Saturday, May 9, 2015

மக்கள் தொலைக் காட்சியில் நானும்

நாளை ஞாயிறு மாலை மாலை 6 மணி முதல் 7 மணிவரை மக்கள் தொலைக் காட்சியின்  “ மொழிவது அறம்” இல் பங்கேற்கிறேன்.

கடந்த ஆறேழு ஆண்டுகளாகவே ஊடக வாய்ப்புகள் அவ்வப்போது வருவதும் நான் தவிர்ப்பதுமாகவே நகர்ந்துள்ளேன். இவற்றுள் ”நீயா நானாவும்” அடங்கும்.

நான் பெரிதும் மதிக்கிற தோழன் AD Bala​ ஒரு முறை விஜய் தொலைக் காட்சிக்காக சொன்னபோதும் மறுத்துள்ளேன்.

கூட்டங்களுக்கு போகிற இடங்களில் எல்லாம் “ ஊடகத்தில் பேசினால் என்ன? என்று கேட்பதும் தவிர்ப்பது தவறு” என்றும் நண்பர்கள் கூறுகிறார்கள்.

ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு பின்னிரவு நீண்ட இணைய உரையாடலில் தோழர் “ நீயா நானா ஆண்டனி” கூட நான் தவறு செய்வதாகவே சொல்லியதுடன் உழைப்பாளர்கள் குறித்த நீயா நானாவில் நான் பங்கேற்க வேண்டும் என்றும் அது பிடிக்கா விட்டால் ஊடகத்தை விட்டுவிடுங்கள் என்றும் சொன்னார்.

ஆனால் கீதா Geeta Ilangovan​ விடாப்பிடியாக சிக்க வைத்துவிட்டார்.

நாளை மாலை 6 மணி முதல் 7 மணிவரை மக்கள் தொலைக் காட்சியின்  “ மொழிவது அறம்” இல் பங்கேற்கிறேன். மிகுந்த தயக்கத்தோடும் கூச்சத்தோடும் செய்தேன். முதல் அனுபவமாயிற்றே.

பார்த்து சொல்லுங்கள் . தொடர்வதா விட்டு விடலாமா என்று யோசிப்போம்.

8 comments:

 1. பார்ப்பது இருக்கட்டும் ...உங்களை போன்ற ஒரு சிலர் ஊடகங்களில் பங்கேற்று பேசுவதன் மூலம் சிறிய அளவிலாவது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் ..தொடர்ந்து ஊடக நிகழ்சிகளில் பங்கெடுங்கள் என்பது எனது கருத்து ...ஆனாலும் , உங்கள் கொள்கை பிடிப்பில் இருந்து விலகாமல் , தற்போது செய்யும் பணிகளிலிருந்து தடம் பிறழாமல் பார்த்து கொள்ளுங்கள் ...ஏனெனில் மீடியா என்பது மெல்லிய போதை ...

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் தோழர்
  தம 2

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க தோழர்

   Delete
 3. ஆவலுடன் காண காத்திருக்கிறேன் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழர்

   Delete
 4. வாழ்த்துக்கள் ஐயா! பார்க்க முயற்சிக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. இது ஒரு பெரிய விஷயமே இல்லை தோழர். முடிந்தால் பாருங்கள். மிக்க நன்றி தோழர்

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

Labels