Monday, May 11, 2015

எங்க அப்பாயி போதும்

( 11.05.2014 பதிவு)

ஒருமுறை அம்மா (விக்டோரியாவின் அம்மா) வந்திருந்தபோது கடிந்து சொல்லிவிட்டுப் போனதால் அப்பாவிடம் கேட்டு மிகுந்த சிரமத்திற்கிடையே அந்தப் படத்தைப் பெற்ற விக்டோரியா அதை பெரிதாக்கி மாட்டி மாலை போட்டுவிடவே அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கிஷோர் அது யாரெனக் கேட்டான்.

உங்க அப்பாயிடா என்று விக்டோரியா சொல்லவே மிரண்டுபோனான். எங்க அப்பாயிதான் ஊருல இருக்கே அப்புறமென்ன புதுசா இன்னொரு அப்பாயி என்றான்.

இல்லடா இதுதான் அப்பாவப் பெத்த பெரிய அப்பாயி. உங்க அப்பாயி சின்ன அப்பாயி.

அதெல்லாம் வேணாம் போட்டோவ எடு, எனக்கு எங்க அப்பாயி போதும் என்று பிடிவாதமாய் முரண்டு பிடித்தான். ஒரு வழியாய் இன்னும் ஏதோ ஒரு காரணத்தால் படம் கழட்டப் பட்டது. பயங்கர திருப்தி கிஷோருக்கு.

என் அம்மாவை நானே பார்த்ததில்லை. வளர்த்தெதெல்லாம் இந்த அம்மாதான். கொடுமை என்னவெனில் நான் அம்மாவை அம்மா என்று அழைப்பதே இல்லை. அக்கா என்றுதான் அழைப்பேன். எனது பெரிய தங்கையும் அப்படியே. என் தம்பியும் அப்படியே அழைத்தான்.

ஊருக்கே அம்மாவாய் இருந்தும் சொந்தப் பிள்ளைகள் அம்மா என்று அழைக்கவில்லை. நல்ல வேளையாக கடைசித் தங்கை அம்மா என்று அழைத்தாள்.

சின்னம்மா, மாற்றாந்தாய் என்றெல்லாம் கட்டமைக்கப்படும் பிம்பங்களைப் படிக்கவும் பார்க்கவும் நேர்கிறபோது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

கிஷோர் ஒரு நாள் விடுப்பு கிடைத்தாலும் அப்பாயியைப் பார்க்கத்தான் போகிறான். பள்ளிக்கு விடுமுறை விட்டால் கீர்த்தி அப்பாயிகிட்டப் போகனும் என்று அடம் பிடிக்கிறாள்.

படிப்பு முடிந்ததும் ஒரு இரண்டு மூன்று ஆண்டுகள் மாமாவோடு ஷார்ஜா போய் கொஞ்சம் சம்பாரித்துவிட்டு வாடா என்று ஒருமுறை கிஷோரிடம் சொன்னபோது சொன்னான்,

“ உன்னையும் சித்தப்பாவையும் நம்பி அப்பாயிய விட்டுட்டு  போக முடியாது. அப்பாயி கூப்டுச்சுன்னா அல்லது அதுக்கு முடியாம போனா சீக்கிரமா வரமாதிரி பக்கமாதான் இருப்பேன்”

எத்தனையோ பேர் அதையும் என்னையும் கிண்டி விட்டு பார்த்திருக்கிறார்கள் நாங்கள் இருவருமே அசையவில்லை. பெரியவன ஒரு வார்த்தை கேட்கனும் என்பதே அதனுடைய முடிவாகும்.

அக்காட்ட கேட்கனும் என்பதே எனதாகும்.

45 ஆண்டுகளுக்கு முன்னால் இறந்த என் அம்மாவின் கல்லறைக்கு நான் கல்லறைத் திருநாள் உள்ளிட்டு எதற்கும் போனதில்லை.

அம்மாதான் வீட்ல இருக்கே.

..

4 comments:

  1. நல்ல அனுபவப் பகிர்வு. பெற்றோரைத் தவிர பிறரால் வளர்க்கப்படும் குழந்தைகள் மன ரீதியாக பிற்காலத்தில் பல தாக்கங்களுக்கு உட்படுகிறார்கள் என்பதை என் அனுபவத்தில் கண்டுள்ளேன். பெற்றோர் அன்புக்காகவும், வளர்த்தவர் அன்புக்காகவும் ஏங்கி மனம் நொந்துவிடுகின்றனர் என்பதே உண்மை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...