Thursday, May 7, 2015

யாரோட ஸ்டூடண்ட்?

என்னிடம் படித்த பிள்ளையவள். இப்போது ஏதோ ஒரு கல்லூரியில் படிக்கிறாள்.

அவளது தம்பி இந்த ஆண்டு தேர்வு எழுதியிருந்தான்.

காலையில் அழைத்தாள்.

"அவன் என்ன பன்றான் பாருங்க சார்"

பாஸ்தானே?

"ஐஸ்ட் பாஸ். 603 தான்"

"சரி விடு. எங்க அவன்?"

"கிரிக்கட் விளையாடுது சனியன். கூப்ட்டு சொன்னா சரி, சரி. ஓவர போடனும்டு ஓடறான் சார். இப்ப பெயில்னு சொல்லியிருந்தா என்னடா பன்னுவேன்னா அப்பவும் சரி ஓவர போடனும்னுதான் சொல்லியிருப்பேங்கறான் சார்"

"யாரு ஸ்டூடன்ட் "என்றேன் திமிறோடு.

" அது என்னவோ நெசந்தான் சார்" என்று சொன்னவள் குறலிலும் தெறித்தது திமிர்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...