Friday, July 1, 2016

பார்வைக் கொடை

23.12.2002,

அரையாண்டுத் தேர்வின் இறுதி நாள்.

அந்த ஆண்டு பரிசோதனை முயற்சியாக எங்கள் மாவட்டத்தில் ஆங்கிலத் தேர்வை இறுதித் தேர்வாக வைத்திருந்தனர்.

யாரோ ஒரு குழந்தை வினாத்தாளில் அய்யம் கேட்டு வரவே வினாத்தாளை வாங்கிப் பார்க்கிறேன். ஒன்றும் தெரியவில்லை. சுத்தமாய் எழுத்துக்கள் புரியவில்லை என்பதைத் தவிர ஆச்சரியம் ஏதும் இல்லை.

இரண்டு ஆண்டுகளாகவே இருக்கிற பிரச்சினைதான். அறை குறையாய் தெரிந்தது இன்று உச்சத்தில் முட்டிக் கொண்டு நிற்கிறது. அவ்வளவுதான்.

இனி தள்ளிப் போட முடியாது. விக்டோரியாவிற்கும் அன்றுதான் இறுதித் தேர்வு. அலைபேசி வரச் சொன்னேன்.

வந்ததும் இருவரும் மஹாத்மா மருத்துவமனை போனோம். சோதித்த மருத்துவர் மீனா மிரண்டே போனார். இதோடவா பள்ளி போகிறீர்கள் என்று கேட்டார். ஆமாம் என்று சொன்னபோது சாத்தியமே இல்லை என்றார். அன்று காலைகூட இரண்டு சக்கர வாகனத்தில்தான் பேருந்து நிலையம் வந்ததாக சொன்னபோது ஆச்சரியத்தின் உச்சத்திற்கே போனார்.

ஒரு நாள் முன்தயாரிப்பு என்றும் அடுத்த நாள் அறுவை செய்துவிடலாம் என்றும் சொன்னவர் எப்போது வைத்துக் கொள்ளலாம் என்றார்.

அடுத்த நாளே நான் தயார் என்று சொன்னதும் வேண்டாம் சார் கிருஸ்மஸ் கொண்டாடிவிட்டு வாருங்கள் என்றார். நான் நாத்திகன் என்று சொல்லி அவர்களை சம்மதிக்க செய்து 25 ஆம் தேதி அறுவை செய்து கொண்டேன்.

எனது லொட லொடா மீனா அவர்களுக்கு பிடித்துப் போகவே நண்பராகிப் போனார். வழக்கமாக மீனாவிடமே அதிகம் பேசியிராத மருத்துவர் ரமேஷ் என்னிடம் நிறைய பேசினார்.

அறுவை முடிந்து ஒரு அறையில் படுக்க வைத்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் ரொம்ப மாறிவிட்டது.

மீனா வருகிறார். இப்ப நான் உங்களோட கெஸ்ட். எப்படி இருக்கீங்க? என்று கேட்டு 2 நிமிடம் பேசிக் கொண்டிருந்தவர் பிறகு மருத்துவராக மாறி கட்டை அவிழ்த்தார்.

மேலே சுழன்று கொண்டிருந்த மின் விசிரியின் கோடுகள் தெளிவாய் தெரிந்தன. சிறு பிள்ளை மாதிரி ஐ கோடெல்லாம் தெரியுதே டாக்டர் என்றால் சொல்கிறார், " அதற்குத்தானே சார் ஆப்பரேஷன் செய்தோம் என்று.

அதன் பிறகு 4 முறை கண்களில் அறுவை செய்தாகிவிட்டது.

ஒவ்வொரு நாளும் நான் வாசிக்கும் சில நூறு பக்கங்களும், எழுதும் சில பக்கங்களும் மருத்துவர்கள் ரமேஷ், மீனா மற்றும் எனக்கு அன்போடும் புன்னகையோடும் மருந்து விட்ட, உதவிகள் செய்த ஒவ்வொரு செவிலியர்கள் ஆகியோர் எனக்களித்த பார்வைக் கொடையால் மட்டுமே சாத்தியப் பட்டவை.

அவர்களை இந்த இனிய நாளில் நன்றி சொல்லி வணங்குகிறேன்

2 comments:

  1. கண்பார்வை முக்கியம் அன்றோ? அந்த அருமையான மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மரணாம் வரைக்கும் மறக்காமல் இருப்பேன் தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...