Sunday, July 3, 2016

ரசனை 19

கொஞ்சம்
அண்ணாந்து பாருங்களேன்..
அந்த மேகத்தை நிச்சயம்
ஒரு குழந்தை தான்
வரைந்திருக்க வேண்டும்.
இத்தனை அலங்கோலமாய்.
இத்தனை அழகோவியமாய்


என்று நான் ராம் எழுதுகிறான். எப்படித்தான் இப்படி எழுத வருகிறதோ இந்தப் பசங்களுக்கு. இதை இன்னும் செதுக்கினால் இதன் உசரம் எங்கேயோ போகும். இதை இவனது உள்டப்பியில் போய் சொன்னாலே போதும். அதுதான் நாகரீகமும்கூட. ஆனாலும் இங்கேயே சொல்வது வளரும் பிள்ளைகளுக்கு உதவும் என்பதால் இங்கேயே வைக்கிறேன்.

ஒரு குழந்தைதான்
வரைந்திருக்க வேண்டும்
அந்த மேகத்தை

இது போதும் என்று பார்க்கிறேன். இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். எழுதியதை சரி செய்வது எளிது. எழுதுவது கஷ்டம்

பொறாமையா இருக்குப்பா ராம்.

2 comments:

  1. மிக்க நன்றி அய்யா..... நிச்சயம் கூர் செய்கிறேன்..... இப்படி ஒரு பாராட்டு ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் வந்திருந்தால் வாழ்வின் திசையே மாறியிருக்கும்.... அகமகிழ்கிறேன்.... ஆயிரம் முத்தங்கள்.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...