Thursday, July 7, 2016

தாயாகவே பாவிப்பதும்

உள்ளே அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று வெளியே விக்டோரியாவின் குரல் உரத்துக் கேட்டது.
“ இதெல்லாம் உங்க அப்பாகிட்ட வச்சுக்கனும். நம்மகிட்ட கத ஆகாது. கரியப் பிச்சுப் புடுவேன் பிச்சு”
கீர்த்தி ஏதாவது செய்து வாங்குகிறாளா?
” சொன்னா கேக்க மாட்டியா? ஒரே திருகு வீசம் கரிய எடுத்துடுவேன். இதெல்லாம் உங்க அப்பாகிட்ட”
சத்தம் உரக்கவே வெளியே எட்டிப் பார்த்தேன்.
கீர்த்தியில்லை.
தோனி விக்டோரியாவை உள்ளே விடாமல் தொத்துக் கால் போட்டு மறித்துக் கொண்டிருந்தான்.
ஒரு புன்னகையோடு உள்ளே திரும்பினேன். திரும்பும் போது எதிர்த்த வீட்டு பாட்டியும் சேட்டுவும் சிரித்துக் கொண்டே உள்ளே போவதைப் பார்த்தேன்.
புரிந்தது,
என்னை மட்டுமே அப்பாவாய் சொல்லிக் கொண்டிருக்கும் விக்டோரியாவை தோனி தாயாகவே பாவிப்பதும் விக்டோரியாவும் தோனிக்கு தாயாகவே இருப்பதும்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...