நேற்றைய நடைபயிற்சி முடிந்ததும் துவங்கு புள்ளியில் இருக்கும் கடையின் அருகில் உள்ள மேடையில் அமர்ந்தேன்.
அருகே ஒரு இளம் தம்பதியரும் அவர்களது குழந்தையும் இருந்தார்கள். விளையாடிக் கொண்டிருந்த குழந்தை என் அருகில் வந்ததும் ”தாத்தா நெயில் எல்லாம் கட் பன்ன மாட்டியா. நாஸ்டி. பேட் பாய்” என்றாள். அதற்குள் அவள் தன் அம்மாவிடம் ’பெரியவர்களை இப்படியெல்லாம்’ என்பது மாதிரி நிறைய வாங்கிக் கொண்டாள்.
வீட்டிற்கு வந்ததும் முதல் காரியமாக நகம் வெட்டினேன்.
இன்றைய நடை பயிற்சி முடிந்ததும் அந்தக் குழந்தையை என்னை அறியாமல் தேடினேன். காணவில்லை.
இந்தத் தாத்தா நகம் எல்லாம் வெட்டி ’குட் பாய் ‘ ஆகிவிட்டேன் என்று அந்தப் பேத்தியிடம் பார்ப்பவர்கள் சொல்லிவிடுங்களேன்
சிறுசுகளிடம் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கத்தான் செய்கிறது தோழர்
ReplyDeleteஏராளமா இருக்கு தோழர். எப்படி இருக்கீங்க?
Deleteவெரி குட் பாய் ... அருமை அய்யா
ReplyDeleteமிக்க நன்றிங்க ஸ்ரீராம்
Delete