இன்று காலை பள்ளிக்கு போகும்போது பேருந்தில் முதல் வரிசையில் என்னோடு ஒரு பெண்ணும் அவரது அப்பாவும் அமர்ந்திருந்தனர். பேருந்தில் ஏறிய ஓட்டுனருக்கும் அவருக்கும் இடையே நடந்த உரையாடலிலிருந்து அவர் ஒரு நடத்துனர் என்பதை அறிய முடிந்தது.
தொடர்ந்த அவர்களது உரையாடலிலிருந்து அவர் தனது மகளை கண் மருத்துவரிடம் காட்டுவதற்காக திருச்சி அழைத்துப் போவதை அறிந்துகொள்ள முடிந்தது.
“ ஆமாம் தம்பி என்ன படிக்கிறான்?” என்ற கேள்விக்கு ஏழாம் வகுப்பு என்றதும் அவரது மகள் ”இல்ல அஞ்சு” என்று திருத்தவே சிரித்துக் கொண்டே “ பையன் என்ன படிக்கிறான்னுகூட தெரிஞ்சுக்க நேரமில்ல . நீயெல்லாம் என்ன அப்பனோ போ மாப்ள ” என்றார்.
பையனும் பிள்ளையும் என்ன படிக்கிறார்கள் என்று தெரியும் என்ற வகையில் நான் நல்ல அப்பன்தான் போல.
மீள்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்