லேபில்கள்

Friday, July 29, 2016

இப்படி ஒரு ஞானத் திமிரோடுஇவரோடு எந்தவிதமான பரிச்சயமும் எனக்கு இல்லை. மேடையிலோ அல்லது படைப்புகளிலோ ஒருபோதும் இவரை எடுத்தாண்டதில்லை. அது ஏனென்றும் விளங்கவில்லை.
இளங்கோ கிருஷ்ணன் (Ilango Krishnan) எழுதியிருந்த அஞ்சலி என்னை உலுக்கிப் போட்டது. எந்தவிதமான பம்மாத்துமற்ற நேர்மையான அஞ்சலி அது.
ஆத்மநாம் வழியாக தன்னுள் வந்த ஞானக்கூத்தன் ஆத்மநாமிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டிருந்ததை நேர்மையாக பதிந்திருந்தார்.
எனக்கு சொல்லத் தெரியாமல் இருந்த ஒரு விஷயத்தை இளங்கோ போகிற போக்கில் போட்டிருந்தார்.
"ஞானக்கூத்தன் கவிதைகளே சிரிக்குமென்கிறார். அய்யோ அய்யோ எத்தனை உண்மை.
"எங்கெங்கும் போவேன் என்ன
வேண்டுமென்றாலும் பார்ப்பேன்
எங்கெங்கும் போவேன் யாரை
வேண்டுமென்றாலும் பார்ப்பேன்
காலரைப் பிடித்துக் கொண்டு
எங்கெங்கு போனாய் என்று
கேட்குமா நியாயம் என்னை"
என்பார் ஞானக்கூத்தன். இப்படி ஒரு ஞானத் திமிரோடு போன ஒரு மனுஷனை எப்படி நியாயம் கேட்க முடியும் நம்மால்.
"இருபதுக்கும் குறைவான ஆட்கள்
இரண்டாவது முறையாக மைலாப்பூரில்"
என்பதாக தோழர் மணோன்மணி ( Manonmani Pudhuezuthu) எழுதியிருந்தார்.
விம்மிக்கொண்டு வந்தது.
ஆழத்தையும் விஸ்தீரணத்தையும் என் ஞானம் ஸ்பரிசிப்பதற்குள் போய்ச் சேர்ந்துவிட வேண்டும்
இன்னும் பத்துபேர் கூட வருவார்களல்லவா

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

Labels