நா. திங்களன் தனது மனதை ஜோலார்பேட்டை ரயிலடியில் குடி வைத்திருப்பவன். ஜோலார்பேட்டை ரயிலடியைப் பற்றி பேசாமல் அவனால் எதுகுறித்தும் உரையாட முடியாது.
அந்த ரயிலடி குறித்து அத்துனை தகவல்களை வைத்திருக்கிறான்.
இவன்தான் அப்படி என்றால் இவனது மகனோ ரயில்களோடே வளர்கிறான்.
ரயிலைக் காட்டிக்கூட அல்ல ரயிலில் உட்காரவைத்துதான் சோறூட்டுகிறான்.
அந்தக் குழந்தையின் மழலையை கவிதையாக்கியிருக்கிறான். ஜானகி (நந்தன் ஸ்ரீதரன்) நெகிழ்ந்து பகிர்ந்திருக்கிறான்
பயணம் முடித்து
இறுதியாக
எங்கள் நிலையம் வந்து
தங்கியிருக்கும் இரயிலைப் பார்த்து
"அப்பா ட்ரயின் தூங்குது"
என்கிறான் மகன்.
இறுதியாக
எங்கள் நிலையம் வந்து
தங்கியிருக்கும் இரயிலைப் பார்த்து
"அப்பா ட்ரயின் தூங்குது"
என்கிறான் மகன்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்