Thursday, July 7, 2016

நேற்றிருந்தார்...


நண்பர் கனகராஜ் பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு பேருந்து நிலைய பயன்பாட்டுக் கட்டணம் வழங்கிக் கொண்டிருக்கும் நகராட்சி ஊழியர். பேருந்துக்கு காத்திருக்கும் நேரத்தில் அவரோடு பேசிக்கொண்டிருப்பேன். பேருந்து இருப்பின் ஒரு வணக்கம் மற்றும் புன்னகையோடு ஏறிவிடுவேன்.
கடந்த திங்களோ செவ்வாயோ அவரைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தேன். நகராட்சி அலுவலகத்தில் காவிரி குடிநீருக்கு யாரைப் பார்க்க வேண்டும் எப்போது பார்க்கலாம் என்று கேட்டேன்.
அந்த நேரத்தில் நான் வழக்கமாக பயணிக்கும் பேருந்து நகரத் தொடங்கியது. அவரது பதிலுக்காக காத்திருந்த என்னிடம் நகரும் பேருந்தை சுட்டிக் காட்டி போங்க சார் போய் ஏறுங்க என்றார்.
நான் தயங்கியபடி நிற்கவே,
“நீங்க எங்க ஓடிறப் போறீங்க, இல்ல நான் எங்க ஓடிறப் போறேன். இங்கதான இருப்போம். சனிக்கிழமை பார்த்துக்கலாம்”
என்றார்.
இப்போது கடை வீதிக்குப் போனால் அவர் நேற்றே இறந்துபோனதாய் போஸ்டர்கள் சொல்கின்றன.
அய்யோ என்பதைத் தவிர ஏதும் செய்ய இயலாதவனாய் நான்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...