Friday, July 1, 2016

எனக்கு 52

முடி வெட்டிக் கொள்ள வந்தால் எனக்கும் முன்னால் இருவர் வரிசையில். "போய் நிதானமா ஒரு டீ சாப்ட்டு வாண்ணா. சரியா இருக்கும்" என்றான்.
பக்கத்து கடைக்கு போனேன். சாப்டுட்டு இருந்த பெண் டீ போடுவதற்காக கை கழுவ எழுந்திரிக்கவே"சாப்டு வந்து போட்டுக் கொடும்மா காத்திருக்கேன்" என்று சொல்லிவிட்டு திண்ணையில் அமர்ந்தேன்.
ரொம்ப சோகமாவும் கண்கள் கலங்கியும் இருக்கவே "என்ன தாயி, என்ன ஆச்சு?"என்றேன்.
"அப்பா செத்துட்டாரு. ஓம் வயசுக்கூட இருக்காதுண்ணா." கண்களை கசக்கவே, "விடு தாயி. எல்லாரும் ஒரு நா போகனும்தான். ஆமாம் என்ன வயசு அவருக்கு ?" என்றேன்
"77 தான்" என்றவர் நான் கேட்காமலே தனக்கு 54 என்றும் சொன்னார்.
எனக்கு 52

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...