அன்பின் தோழர்களே,
வணக்கம். ஒரு கடிதத்திற்கும் மறு கடிதத்திற்கும் இடையே ஒரு காலண்டரே காலாவதியாகிவிடுகிறது. ஒரு மகிழ்வான செய்தியை பகிர்ந்துகொள்வதற்க்காகவே இந்தக் கடிதம்.
இந்தப் பிறந்த நாளின் பின்னிரவில் அந்த தோழன் அழைத்தான். எல்லோரையும் போல வாழ்த்த வரவில்லை என்றும் பரிசோடு வந்திருப்பதாகவும் சொன்னவன் எனது அடுத்தப் புத்தகத்தை அந்த பதிப்பகத்தார் கேட்பதாகவும், தர வேண்டும் என்றும் கோரினான்.
அடுத்த நாள் அழைத்து கட்டுரைகளை மெயில் செய்ய சொன்னான்.
ஒரு மணி நேரம் கழித்து லே அவுட் முடியும் தருவாயில் இருப்பதாக சொல்கிறான்.
ஆக, எனது எட்டாவது நூல் வருகிறது. ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு தயாராகிவிடும் என்கிறார்கள்.
வழக்கத்திற்கு மாறாக இந்த நூலைக் கொஞ்சம் கொண்டாடினால் என்ன என்று தோன்றுகிறது.
எழுதி ஈரம் காயும் முன்னே அச்சுக்கு கொண்டுவரும் பத்திரிக்கைத் தோழர்களையும் பதிப்பகத் தோழர்களையும் அணைத்துக் கொள்கிறேன்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்