பேராசிரியர் ஜென் முரளி (Zenmurali Sachithanandam Rms) அவர்கள் என் ஆளுமைமிக்க தோழமைகளுள் ஒருவர். சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராய் பணிபுரிகிறார்.
அறிவியலின் நுட்பங்களையும் கனிகளையும் சாமானிய மக்களிடம் கொண்டுபோய் சேர்பப்பதை மட்டுமே தனது நோக்கமெனக் கொண்டு செயல்படுபவர். அவரது முகநூல் பக்கத்தை இதற்காகவே பயன்படுத்துபவர்.
இரண்டு ஆச்சரியங்கள் அவர் குறித்து எனக்குண்டு
1 அவரை எப்படி அறிவயல் இயக்கத் தோழர்கள் இதுவரை கண்டடையவில்லை.
2 இவ்வளவு ஆளுமைமிக்க மனிதரால் என்னை எப்படி ஒரு பொருட்டாக மதிக்க முடிகிறது.
அரசங்குடிக்கு தேர்தல் பணியின்பொருட்டு நான் வந்திருப்பதை அறிந்ததும் தேர்தல் முடிந்ததும் அங்கு வந்துவிட்டார்
Anthology of Soviet short stories இரண்டு வால்யூம்களை கொண்டுவந்து கொடுத்தார். வாசிக்க சிரமமாக இருப்பதாகவும் என் மொழியில் அதைப் பெயர்த்து தந்தால் பாமரனுக்கும் உதவும் என்றார்
இரண்டு விஷயங்கள் மீண்டும்
1 அவற்றில் உள்ள பெயர்ச் சொற்களை தமிழ்ப்படுத்த உங்கள் உதவி வேண்டும்
2 அவசியம் அவரது முகநூல் பக்கத்திற்குள் நீங்கள் பயணிக்க வேண்டும்
நண்பர் அறிமுகத்திற்கு நன்றி. சமூகத்தில் பல சாதனையாளர்கள் முன் நிறுத்தப்படுவதில்லை என்பது வேதனையே.
ReplyDeleteசொற்களுக்குள் சிக்கிக் கொள்ளாத மிகப் பெரிய ஆளுமை தோழர் அவர்
Delete